Citizen Kane

எத்தனையோ படங்களை இதுவரை பார்த்திருந்தாலும் என் மனதை விட்டு அகலாத ஒரு படம் உண்டென்றால் அது 'சிட்டிசன் கேன்' தான். படத்தின் கதை மட்டுமல்ல, காமெராக் கோணம் முதல், நிழல்களின் நாட்டியங்கள் வரை ஒரு சிற்பியின் நேர்த்தியோடு செதுக்கிய படம் இது. சமிபத்திய தசாவதாரம் படத்தில் முதற்காட்சியில் வரும் க்ராபிக்ஸ் ஷாட் மற்றும் முகுந்தா பாடலில் வரும் சிங்கிள் ஷாட் போன்ற பல கேமரா கோணங்களை பார்க்கும் போதெல்லாம் எனக்கு சிட்டிசன் கேன் நினைவிற்கு வந்துவிடும். மணிரத்னத்தின் அலைபாயுதே படத்தில் சகோதரிகள் ஆடிப்பாடும் ஒரு பாட்டிலும் அந்த உத்தி கையாளப்பட்டிருப்பதைப் பார்க்கலாம். இப்போது பார்த்தாலும் ஒரு புதிய படத்தைபார்த்த கிறக்கம் எனக்கு போவதில்லை.

கீழே உள்ளது சில வருடங்களுக்கு முன் மரத்தடியிலும், ராயர் காபி கிளப்பிலும் எழுதிய விமர்சனம். என் சேமிப்பிற்காகவும், உங்கள் நுகர்வுக்காகவும் இந்த மறுபதிப்பு!

--------------------------------------------------------

சிட்டிசன் கேன் - Citizen Kane (1941)

விமர்சனம் : டைனோ

வாழ்க்கை ஒரு Jig-saw puzzleஐப் போன்றது. இறைந்து கிடக்கும்
உதிரிகளை ஒன்றோடு ஒன்றாக
இணைத்து விடுகதையின் பதிலை தேடி அலையும் ஒரு சிறு பயணமே
வாழ்க்கை. சிலருக்கு விடுகதையின் சூட்சுமம்
எளிதில் புரிந்துவிடுகிறது அதை பிறருக்கு எடுத்துசொல்லவும் முடிகிறது,
அவர்கள் இறைதூதர்கள், சிலருக்கு
சூட்சுமம் புரிந்தாலும் அதை அடையும் வழிதெரிவதில்லை அவர்கள்
ஞானிகள். பலருக்கு சூட்சுமமும் புரிவதி
ல்லை அதை புரிந்தவனிடம் கேட்கவும் மனமில்லை. சமூகம் என்ற
மாயையில் உழன்று வேடிக்கை மனிதனாய் வி
சும்பில் கரைகிறான். இரைந்து கிடக்கும் Jigsaw puzzleஇன்
பாகங்களை ஒழுங்குபடுத்தி ஒன்றோடு ஒன்றை
இணைத்தவுடன் காணக் கிடைக்கும் ஓவியத்தை பார்க்கையில் மனதில்
பரவும் அந்த மகிழ்ச்சியைக்
கொடுக்கும் "சிட்டிசன் கேன்" (Citizen Kane).

விருமாண்டி திரைப்படத்திற்கு பிறகு ஜப்பானிய இயக்குனர் அகிரா
குரோசாவாவின் (Akira Kurusawa)
திரைக்கதை உத்தி (தமிழகத்தில்) பெரிதும் பேசப்படுகிறது. ஒரு
கதையை ஒன்றுக்கு மேற்பட்ட கதைசொல்லி
கள் மூலமாக விவரிப்பதுதான் அந்த உத்தி. கமலஹாசன் அதிலும்
கொஞ்சம் நவினத்தை(!) புகுத்தி, ஒரே
கதையை இருவர், அதுவும் ஒருவர் சொல்லாமல் விட்டதை மற்றவர்
கூறுவதைப்போல அமைத்து வெற்றிபெற்றிருக்கி
றார். இந்த உத்தியை பயன்படுத்தி 1950ல் குரோசாவாவின் புகழ்
பெற்ற ரஷோமான் (Rashomon) வெளி
யாவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே ஆர்சன் வெல்ஸ்(Orson
Welles)ன் 'சிட்டிசன் கேன்' வெளி
யாகி ஒரு தனிமனிதனின் ஆணவ பிடிவாதத்தால் RKO ஸ்டுடியோவின்
பெட்டிகளில் உறங்கிக்கொண்டிருந்தது.

புகழின் விளிம்பில் வாழ்ந்த ஒருவனின் தனிவாழ்க்கையின் வெற்றி
தோல்விகளை ஐந்து நபர்களின் மூலம் நமக்கு
விளக்கப்படுகிறது. கேனின் வங்கி காப்பாளன், காரியதரிசி, நண்பன்,
இரண்டாம் மனைவி,
சமையற்காரன்/காரியதரிசி ஆகியவர்களின் பார்வையில் கேன் என்ற
ஒரு பதிப்பு சாம்ராஜ்ய சக்கரவர்த்தியின்
வாழ்க்கை புரட்டிபோடப்படுகிறது. இதைத்தவிர கேனின் இறப்பின் பின்
காண்பிக்கப்படும் குறுப்பட செய்தி
தொகுப்பு அவன் வாழ்க்கையை செய்திகளாக, தினத்தந்தி பெட்டி
செய்தியைப்போல எந்த சுயஉணர்ச்சிகளையும்
வெளிப்படுத்தாமல் ஒருவனின் பணபலத்தை பற்றிய பிரம்மிப்பை மட்டும்
வெளிப்படுத்தி முடிகிறது.

"உள்ளே நுழையாதே!" என்ற துறுபிடித்த அறிவிப்பு பலகை கம்பி
வேலிகளில் கட்டப்பட்டிருக்கிறது. வேலியின்
மத்தியில் மாபெரும் பிரம்மாண்டமான இரும்பு நுழைவுக்கதவு. கதவின்
உச்சியில் "K" என்ற எழுத்து. அதன் பி
ன்புறம் இருளில் ஒரு அரண்மனைக் கட்டிடம். இருளில் இருக்கும் அந்த
பிரம்மாண்ட கட்டிடத்தில்
ஒரே அறைமட்டும் வெளிச்சமூட்டப்பட்டிருக்கிறது. அறையினுள் படுக்கையில்
சாவின் கடைசி நொடியில் இருக்கும்
கேனின் கைகளில் ஒரு கண்ணாடி குடுவையில் பனி விழும் வீட்டு
அமைப்புகொண்ட ஒரு பொம்மை. கேனின் வாய்
மெல்ல திறந்து ஒரேஒரு வார்த்தையை உதிர்த்ததும் குடுவை கிழே
விழுந்து நொறுங்குகிறது. அதற்கே காத்தி
ருந்த நர்ஸ் கேனின் முகத்தை மூடி அவன் இறந்ததை உறுதி
செய்கிறாள். அவன் உதிர்த்த அந்த கடைசி
வார்த்தை 'ரோஸ் பட்' (R o s e B u d).

பனித்துகள்கள் எங்கும் கொட்டி இயற்கை விதவைக்கோலம் பூண்டிருந்த ஒரு
பனிக்கால காலை. ஒரு வீடு, அதன்
மேலுள்ள பலகை அது ஒரு தங்கும் விடுதி என்பதை
விளம்பரப்படுத்துகிறது. வீட்டிற்கு வெளியே சிறுவன் கேன்
தன் பனிச்சறுக்கு பலகையில் (Snow Sledge) விளையாடிக்கொண்டிருக்கிறான்.
விடுதியின் உள்ளே கேனின்
தாய் (விடுதியை பராமரிப்பவளும் அவளே) அவர்களுக்கு அதிருஷ்டத்தால்
வந்த குடும்ப சொத்துக்களை (தங்கச்
சுரங்கம்) வங்கி காப்பாளனிடம் ஒப்படைக்கிறாள், கூடவே தன்
மகனையும் அவன் மேற்பார்வையில் பராமரி
க்கும் படி கேட்கிறாள். கேனின் குடிகார தந்தை தடுத்தும்,
கேனின் அழுகையிடையிலும் அவன் பனிச்சறுக்கு
பலகை வீசப்பட்டு, காப்பாளனிடம் ஒப்படைக்கப்படுகிறான்.

தொழிற்துறையையும் தொழில் புரிவதற்கான விஷயங்களையும் வெளிநாடுகளில்
படித்து இளைஞனாக தன் இணைபிரி
யா நண்பன் ஜெடாடையாவுடன் (Jedediah) திரும்புகிறான் கேன்.
அத்தனை சொத்துக்களுக்கு அதிபதியான
கேன், செய்தித்தாள் நடத்துவதே தனக்கு ஆர்வம் என்று கூறி
நஷ்டத்தில் இயங்கும் ஒரு செய்தித்தாள் நி
றுவனத்தை வாங்குகிறான். செய்திகள் நிறுவன அலுவலகங்களை வந்து
சேரும்வரை காத்திருக்ககூடாது, செய்தி
களை நிருபர்கள் எதிர்பார்த்து அதை முனைப்புடன் அவர்களே சேகரித்து
கொண்டுவரவேண்டும், அவ்வாறு செய்தி
இல்லாத போது செய்திகளை உருவாக்க வேண்டும் என்று புதிய
கொள்கையை அறிமுகப்படுத்துகிறான்
கேன். அதுவே அவனின் வளர்ச்சிக்கு காரணமாகவும் அமைகிறது.
செய்தித்தாள் வியாபாரம் முதலில் நஷ்டம்
ஏற்படுத்துகிறது, ஆனால், தான் எடுத்த காரியத்திலிருந்து பின்வாங்காத
குணத்தினாலும் வியாபார உத்தி
களாலும் வெற்றி பெறுகிறான் கேன். கேனின் வளர்ச்சி மற்ற பல
பத்திரிக்கை நிறுவனங்கள் மூடப்படுவதற்கு
காரணமாகிறது. ஆனாலும் வாழ்க்கையில் ஏதோ இழந்ததையே அவன்
மறக்கவில்லை.

அமெரிக்க ஜனாதிபதியின் உறவினப் பெண்ணான எமிலியை (Emily)
திருமணம் செய்துகொள்கிறான் கேன்.
ஆடம்பரமாய் துவங்குகிற அவர்கள் வாழ்க்கை கொஞ்சம் கொஞ்சமாக
சிதிலமடைந்து உடைந்தும் போகிறது.
இங்கே அவர்களின் திருமண வாழ்க்கையை இயக்குனர் விவரிக்க
உபயோகப்படுத்து உத்தி கவனிப்புக்குரியது!
கேன் தன் பத்திரிக்கையில் தன் ஜனாதிபதி மாமனை
விமர்சிப்பதை எமிலியால் ஏற்கமுடிவதில்லை. அதனால்
கேன் தன் போக்கை மாற்றியமைத்துக் கொள்ளவேண்டும் என்று எமிலி
வாதிக்கத்துவங்குகிறாள். கேன் அதை
மறுத்து தன் கண்ணோட்டத்தை விளக்குகிறார். விவாதம் நடைபெறும்போதே
இருவருக்கும் வயது கூடிக்கொண்டே
போவதையும், விவாதம் முடியும் போது இருவரும் எதிரெதிர்
நாற்காலியில் பேசாமல் உட்கார்ந்தி
ருப்பதைப்போலவும் ஒன்பது வருட திருமண வாழ்க்கை இந்த
சச்சரவிலேயே கழிந்ததை மிக நேர்த்தியுடன்
காட்சி அமைக்கப்பட்டிருக்கிறது. விவாத முடிவில் எமிலி கேனின்
எதிரியாக கருதப்படும் மற்றோரு நிறுவனத்தி
ன் செய்தித்தாளை எமிலி படிப்பதுடன் காட்சி நிறைவுபெறுகிறது.
அதற்கு பிறகு இருவரும் அதிகம் பேசி
க்கொள்வது இல்லை!

சொந்த வாழ்க்கையில் நிகழ்ந்த சோகம் அவனை கட்டிப்போட்டு
விடவில்லை. தன் சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தி
க்கொண்டே போகிறான். ஒரு மழைநாளில் பல்வலிக்கு மருந்து
வாங்கவரும் சூசனை (Susan) சந்திக்க நேர்கி
றது. கேன் ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் அதிபதி என்பதை
சூசன் அறியாமல் வெளிப்படையாக வெகுளியாக
பேசுவது கேனை மிகவும் கவர்கிறது. சூசன் தான் ஒரு ஓபெரா
(Opera) பாடகியாக வரவேண்டும் என தன்
தாய் விரும்புவதாகவும் அதுவே தன் லட்சியம் என்றும்
குறிப்பிடுகிறாள். சூசனுக்கு உண்மையில் ஓபெரா
பாடுவதற்கான குரல்வளம் வாய்த்திருக்கவில்லை. ஆனாலும் கேன் அவள்
குரலை சிலாகிக்கிறான். கேன் சூசனை
தன் இரண்டாம் மனைவியாக ஏற்கிறான். அவளுடைய கொடூரமான
குரலையும் தன் செய்தித்தாள்களில் புகழ்ந்து
எழுதச்சொல்கிறான். மற்ற ஓபெரா கூடங்கள் அவளுக்கு வாய்ப்பளிக்க
மறுத்ததால் அவன் மனைவிக்காக சி
காகோவில் ஒரு புதிய ஒபெரா கூடத்தையே நிறுவுகிறான் கேன்.
அவள் குரலை தன் நண்பன் ஜெடாடையாவை
கொண்டு புகழ்ந்து எழுதச்சொல்கிறான்.

ஜெடாடையாவுக்கு கேனின் இரண்டாம் திருமணத்தில் விருப்பமில்லை.
எமிலியுடன் ஜெடாடையா கொண்ட
நட்பும் அதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இதற்கிடையில் கேன்
நியுயார்க் மாநில கவர்னர் பதவி
தேர்தலில் சுயச்சையாக போட்டியிடுகிறான். ஜெடாடையாவின் கூரிய
அறிவினாலும் உதவியாலும் கேன் மக்களி
ன் மனதில் நிறைகிறான், ஆனால் எதிரணியில் போட்டியிடும்
வேட்பாளன் கேனுக்கு சூசனுடனிருக்கும்
கள்ளத்தொடர்பை அம்பலப்படுத்தி அவன் வெற்றிவாய்ப்பை நிறுத்திவிடுகிறான்.
எமிலி கேனிடம் சூசனை துரத்தி
விடும்படி கூறியும் கேன் மறுப்பதால் எமிலி கேனைவிட்டு
பிரிகிறாள். தேர்தல் தோல்வியை ஏற்கமுடையாத
ஜெடாடையாவும் கேனிடம் கருத்து வேறுபாடு கொண்டு செய்தித்தாளின்
சிகாகோ பதிப்பிற்கு ஆசிரியனாய்
போய்விடுகிறான். இந்த சமயத்தில்தான் கேன் ஜெடாடையாவை சூசனின்
குரலை பாராட்டி எழுதசொல்கிறான்.
லட்சியத்தையும் பத்திரிக்கை தர்மத்திற்கும் எதிராக ஒரு பொய்
செய்தியை வெளியிட ஜெடாடையா
மறுப்பதால் அவனை நண்பனென்றும் பாராமல் பணிநீக்கம் செய்கிறான்
கேன். நட்புக்கு அடையாளமாக அவனுக்கு
ஒரு பெரிய உதவித்தொகையையும் அனுப்புகிறான் கேன், ஜெடாடையா
அதை மறுத்து திருப்பி அனுப்பிவிடுகி
றான்.

கேன் தன் கனவுக்கோட்டையான க்ஷனாடூ (Xanadu) என்ற அரண்மனையை
கட்டுகிறான். அது ஒரு அரண்மனை
என்று சொல்வதைக்காட்டிலும் ஒரு தனி நகரமென்றே சொல்லவேண்டும்.
உலகில் எல்லாப் பகுதிகளில்
இருந்தும் அரும்பொருட்களையும் கலை பொருட்களையும் வாங்கி தன்
அரண்மனையில் நிரப்புகிறான்.
கலைப்பொருட்கள் நிறைந்த அரண்மனையில் சூசன் தனியே பேசக்கூட
ஆள்துணையின்றி தவிக்கிறாள். கேன்
தன்னை அடிமைப்படுத்தி தன் வாழ்க்கையை தன் போக்கிற்கு வாழ
வற்புறுத்துவதாக சண்டையிடுகிறாள். கேன்
வீட்டில் இல்லாத போது பெரிய jig-saw puzzleல்களை இணைத்து
பொழுதைக்கழிக்கிறாள். வி
டுமுறைக்காக நண்பர்களோடு தன் உல்லாச விடுதியில் பொழுதைகழிக்கும்
ஓரு நன்நாளில் கேனிடம் சண்டையிட்டு
சூசனும் பிரிகிறாள். சூசன் தன்னைப் பிரிந்து செல்வதை
தாங்கிக்கொள்ள முடியாத கேன் தன் அறையில்
உள்ள அத்தனை பொருட்களையும் வீசி சேதாரப்படுத்துகிறான். அனைத்தையும்
சர்வ நாசம் செய்யும் அவன்,
ஒரு சிறிய கண்ணாடிக்குடுவையை மட்டும் கையில் எடுத்து செல்கிறான்.
குடுவைக்குள் பனிவிழும் வீடு
பொம்மை. அப்போது அவன் வாயிலிருந்து வெளிப்படும் வார்த்தை
'ரோஸ் பட்'. அதை கேனுடைய
சமையற்காரன் கேட்டதாக பிறிதொரு சமயத்தில் கூறுகிறான்.

தனிமையின் சோகம் தன்னைத்துரத்த கேன் மிக விரைவில்
நோய்வாய்ப்படுகிறான். அரண்மனையில் தன் அறையி
ல் 'ரோஸ்பட்' என்ற அந்த வார்த்தையை கூறி இறக்கிறான் கேன்.

முன்னர் குறிப்பிட்ட குறும்படச்செய்தித்தொகுப்பாளன் அந்த வார்த்தையின்
அர்த்தம் தேடி கேனின் வாழ்வின் முக்கி
ய நபர்களை தேடிச்செல்கிறார். முதலில் கேன் தான் தொடர்பு
வைத்திருந்த பெண்களை அவ்வாறு அழைத்தி
ருக்கலாம் என்றே அவர்களை அணுகுகிறான். ஆனால் ஒவ்வொருவரும்
கேனின் வாழ்க்கையை விவரிக்கும்
போதும் அவன் வாழ்வின் மர்மம் கூடிக்கொண்டே போகிறதே ஒழிய
யாருக்கும் சரியான பதில் தெரிவதி
ல்லை. அவருடன் சேர்ந்து படம் பார்க்கும் நம்மையும் அந்த தேடலில்
இணைத்து அழைத்துச்செல்கிறார்
இயக்குனர்! கருப்பு வெள்ளை படத்தில் காட்சிகளின் ஆழம் நம்மை
வியப்படையச்செய்யும். காமி
ராக்கோணங்களும் ஒலியமைப்பும் (இயக்குனர்/கதாநாயகன் ஓர்சன் வெல்ஸ்
வானொலி நாடகம் நடத்தி
புகழ்பெற்றவர்) நடிப்புத்திறனும் (படத்தில் நடித்த நடிகர்கள் பலருக்கு
இதுவே முதல் படம்) கலை ஆக்கமும்
(அரண்மனை, ரயில்நிலையம், கேன் சேகரித்த கலைப்பொருட்கள், கேனின்
இளமைக்கால வீடு, நூலகம்) தி
ரைக்கதையும் (ஐந்து நபர்கள் கதையை தன் கண்ணோட்டத்தில் கூறுவது)
ஒப்பனையும் (ஒரு நடிகரே இளமைக்கால
கதாபாத்திரத்தையும் முதுமையடைந்த கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்திருப்பது,
காலங்கள் மாறும்
போது அவர்களுடைய வயதும் முகச்சுறுக்கங்களும் மாறி வருவது)
அருமையான இயக்கமும் (ஓர்சன் வெல்சின் முதல்
படம்) படத்தொகுப்பும் (கேன் எமிலி வாக்குவாதம், கேன்
ஜெடாடையா உரையாடல்) ஒளிப்பதிவும் (கேனின்
கவர்னர் உரை, தாச்சர் நூலகம், க்ஷனாடூ அரண்மனைக்காட்சிகள்) என்று
அனைத்து விதத்திலும் நம்மை கடைசி
க்காட்சிவரை நம்மை கட்டிவத்துவிடுகிறார்கள்.

கேனின் இறப்பிற்கு பிறகு கேனின் கடனாளிகள் அவன் அரண்மனையை
வசப்படுத்திக்கொள்கின்றனர். கேனின்
கலைச்சேகரிப்பு மொத்தமும் பொட்டலம் கட்டப்பட்டு விற்பனைக்கு
தயார்படுத்துகிறார்கள். வேண்டாத
பொருட்களை அரண்மனை நெருப்புக்கூடத்தில் இட்டு கொளுத்துகின்றனர்.
கேனின் சேகரிப்பில் உள்ள
பொருட்களைக்கண்டு அதை எரிப்பவர்கள் கூட ஆச்சரியப்படுகின்றனர்.
செல்வந்தன் கேன் தென் சேமிப்பில் பைசா
பெறாத சிறிய பொருட்களும் அடக்கம். உபயோகமற்ற அட்டைப்பெட்டிகளும்
சரடுகளும் தீக்கிரையாக்கப்படுகி
றது. பணியாட்களில் ஒருவன் ஒரு பழைய மரப்பலகையை தீயினுள்
இடுகிறான். பாதி சிதிலமைந்த அந்த
மரப்பலகை சிறுவன் கேன் தன் தாயுடன் விடுதியில் இருந்த போது
பயன்படுத்திய பனிச்சறுக்குப்பலகை. எரியும்
பலகையில் முதலில் அதன் மீது ஒட்டியிருந்த குப்பைகள் எரிகின்றன,
அதையடுத்து அதில் எழுதப்பட்ட ஒரு
வார்த்தை சில விநாடிகள் தெரிந்து முழுவதும் மறைந்து விடுகிறது.
பலகையில் இருந்த அந்த வார்த்தை -
''ரோஸ்பட்" (R O S E B U D).

நடிப்பு : ஓர்சன் வெல்ஸ் (கேன்), யோசெப் காட்டன்
(ஜெடாடையா), டொரொத்தி காமிங்கோர் (சூசன்),
ரூத் வாரிக்(எமிலி)
இயக்கம் : ஓர்சன் வெல்ஸ்
திரைக்கதை : ஓர்சன் வெல்ஸ் / ஹெர்மன் மன்க்கிவிச்
(திரைக்கதைக்கான ஆஸ்கர் வென்றது)

-*_*-*_*-*_*-*_*-*_*-*_*-*_*-*_*-*_*

கதையின்கதை:

சிட்டிசன் கேன் ஒரு நிஜத்தின் நிழல். வில்லியம் ருண்டால்ப்
ஹெர்ஸ்ட் என்ற செய்தித்தாள் அதிபரின்
வாழ்க்கைச்சம்பவங்களின் நிழல் தொகுப்பே சிட்டிசன் கேன். தன்
வாழ்க்கை பிறரின் பார்வைக்கு காட்சி
பொருள் ஆவதை விரும்பாத ஹெர்ஸ்ட் இந்தப்படத்தை பல
விதங்களிலும் தடங்கல் ஏற்படுத்தினார். தன்
செல்வாக்கைப்பயன்படுத்தி, தயாரிப்பு நிறுவனத்திற்கு பண நெருக்கடி
ஏற்படுத்தினார். ஆனால் வெல்ஸ் தன்
சொந்த பணத்தை செலவிட்டு ஒருவாறு படத்தை முடித்தார். ஆனாலும்
திரையரங்குகளில் இப்படத்தை திரையி
டுவதற்கும் சிக்கல் உருவாக்கினார் ஹேர்ஸ்ட். அதனால் தயாரிப்பு
நிறுவனமான RKO பிக்சர்ஸ் பல பிரதிகளை
திரும்பப்பெற்றுக்கொண்டது. ஆஸ்கர் பரிசி வழங்குவதில் கூட ஹேர்ஸ்டின்
நெருக்கடியினால் வெல்சுக்கு
வழங்கப்படவில்லை என்றும் கூறினர். இந்த தடைகளை தாங்கிக்கொள்ள
முடியாத RKO, படத்தை பெட்டியில்
பூட்டிவிட்டு மறந்துபோய்விட்டிருந்தது. ஹேர்ஸ்டின் 1951ல் மறைந்த பிறகு
1953ல் ஐரோப்பிய திரப்படவிழாவி
ல் திரையிடப்பட்ட பிறகு சிட்டிசன் கேன் மீண்டும் பேசப்பட்டது.
இன்றளவும் சிறந்த உலகத்திரைப்படவரிசையி
ல் சிட்டிசன் கேன் முதல் இடத்தில் இருக்கிறது.

--
March 25, 2004

===

சிட்டிசன் கேன் சிங்கிள் ட்ராக்கிங் ஷாட்.

9 comments:

said...

நல்ல விமர்சனம் டைனோ!!

சிட்டிசன் கேன் நான் ரசித்துப் பார்த்த திரைப்படங்களில் ஒன்று. கேன் கதாபாத்திரம் மிகச்சிறப்பாக புனையப்பட்டிருக்கும். அப்பவே இப்படி எடுத்திருக்காங்களேன்னு பிரமிப்புடன் பார்த்த திரைப்படம்!!

said...

நன்றி கப்பி.

சிட்டிசன் கேன் உண்மைக் கதையின் தழுவல் என்று ஒரு பெரிய போராட்டமே நடந்தது. புது டிவிடி வர்சனில் இது பற்றி விரிவாக விவாதித்திருக்கிறார்கள்.

said...

படம் பார்க்க தூண்டி விட்டுடிங்க. கூடிய சீக்கிரம் பாத்துடறேன்.

சிங்கிள் ட்ராக்கிங் ஷாட் - நான் முதல்ல பாத்தது 'குணா' படத்துல. 'உன்னை நானறிவேன்' பாட்டில் குணாவின் அறையின் ஜன்னல் வழியே வெளியே செல்லும் காமெர ஹைதராபாத்தின் இரவு வாழ்க்கையை காண்பித்துக் கொண்டே மீண்டும் அவன் வீட்டுக்கு வரும். கவனித்தீர்களா? :-)

said...

ஸ்ரீதர் - குணா நல்லா அவதானித்திருக்கிறீர்கள்... ஆனா அது ட்ரிக் ஷாட். தசாவதாரத்தில் முகுந்தா பாடலில் ட்ராக் ஷாட்டை பிளாஷ் போட்டோகிராப்பர் ஒருத்தர் ப்ளாஷ் செய்யும் போது கட் செய்து எடிட்டிங்கில் ஒட்டி இருப்பார்கள். குணாவில் 3 செக்கண்ட் இருட்டில் வெட்டி ஒட்டியிருப்பார்கள்.

மணிரத்னம் பம்பாய் படத்தில் கலவரக்காட்சிகளில் கொஞ்சம் ட்ரை பண்ணியிருப்பார். மேலும் கண்ணாலனே பாட்டில் ஒரு சரணம் முழுதும் ஒரே ஷாட்.

இன்னொரு ஜீனியஸ் ட்ராக்கிங் ஷாட் - கவுண்டமணி சின்னதம்பி படத்தில் தரும் Monologue. அது முழுக்க கவுண்டமணியாரின் ஜினியஸினால்தான்... Perfect Timing!

நடனத்தில் பிரபுதேவா ராசய்யா படத்தில் ஒரு பாடலில் ட்ரை செய்திருப்பார்.

இதில் எனக்குப்பிடித்தது தசாவதாரமும் கவுண்டரும்தான்!

said...

//தசாவதாரமும் //

தசாவதாரம் CG-மூலம் செய்யப்பட்டது.

இன்னொரு ரியல் ட்ராக்கிங் ஷாட் - 'ஆஹா' படத்தில் வரும். அந்த திருமண வீட்டு அந்தாக்க்ஷரி விளையாட்டு... அது முழுவதும் ஒரே ஷாட். கடைசியில் கேம்ரா முன்னால் ஒருவர் வந்து மறைக்க அதை ரீ-ஷூட் பண்ணாமல் விட்டிருப்பார்கள்.

//கவுண்டமணி சின்னதம்பி படத்தில் தரும் Monologue.//

இந்தக் காட்சி சரியாக ஞாபகம் இல்லையே. இன்னொரு படத்தில் கவுண்டமணி இரண்டு கண்களிலும் கட்டுப் போட்டுக் கொண்டு சத்யராஜோடு நடந்து வருவார். அப்பொழுது பேசும் நீநீநீள வசனத்தை சொல்கிறீர்களோ? :-)

said...

பிரபு தேவாவின் பாடல்களில் 'சிங்கிள் ட்ராக்கிங் ஷாட்' மட்டுமல்ல, ஒரு குட்டிக் கதையே சொல்லிவிடுவார்.

'மஞ்சக்காட்டு மைனா' பாட்டில் அப்படித்தான் இருக்கும். அவருடைய நடனங்கள் பரதமும், Folk-க்கும் கலந்த ஒரு வகை ப்யூஷன் முறையில் இருக்கும்.

said...

>>>>தசாவதாரம் CG-மூலம் செய்யப்பட்டது.

தசாவதாரம் முதல் காட்சிதான் CG. முகுந்தா ட்ராக் + ட்ரிக் ஷாட்!

டான்ஸ் மற்றும் குறைந்த அளவு வசனங்களூடன் ஈஸியாக செய்துவிடலாம். வசனத்தோடு அதுவும் ப்ராம்டிங் கூட செய்ய முடியாத அளவு வேகமான வசனங்களுடன் செய்தது கவுண்டர் தி கிரேட்!

இதோ அந்த வீடியோ:

http://www.youtube.com/watch?v=VLwLLqO-6vE

said...

//வசனத்தோடு அதுவும் ப்ராம்டிங் கூட செய்ய முடியாத அளவு வேகமான வசனங்களுடன் செய்தது//

ட்ராமா அனுபவம் உள்ளவர்கள் ஈஸியாக செய்யலாமேங்க. வீ. க.பொம்மன், விசுவின் படங்களில் எல்லாம் இந்த மாதிரி நீள வசனங்களை ஒரே ஷாட்டில் செய்யத்தானே செய்திருக்கிறார்கள்.

இப்ப வந்திருக்கிற குசேலனில் வடிவேலு ரஜினியை அருகில் பார்த்தவுடன் ஒரு 3 நிமிடங்கள் தொடர்ச்சியாக ஒரே ஷாட்டில் பேசுவார். அதுவும் பீல்டிக்குள்ளாக குட்டிக்கரணம் அடித்தப்படி ஓடியாடி விடாமல் டயலாக் வேறு பேசுவார்.

விஷுவலாக அதை எப்படி வழங்குகிறார்கள் என்று பார்த்தால் மீண்டும் குணா-வில் வரும் கிரீஷ் கர்னாட் மற்றும் கமல்ஹாசனின் காட்சி. கொஞ்சம் கொஞ்சமாக டெம்போவை கூட்டி ஒரேயடியாக நச்-என கதவில் மோதி முடியும் காட்சியும் நீங்கள் சேர்த்துக் கொள்ளலாம். :-))

said...

கமலஹாசம் ஒரு ரூமிலேயே சுத்தி வருவாரே அந்தக் காட்சிதானே - அதில் கேமரா ஒரே இடத்தில ரிவால்வ் ஆகும், மற்ற மூவ்மெண்ட் கிடையாது. அதுக்கு இதயத்தைதிருடாதே ”ஒம் நமஹா” பாடல் பறவாயில்லைன்னு நினைக்கிறேன். குசேலன் பாக்கலை. வடிவேலு சுந்தர்.சி ஹீரோவா நடிச்ச ஒரு படத்துலகூட சிங்கிள் ஷாட்ல கதை சொல்லுவார். பட் அதிலும் கேமரா மூவ்மெண்ட்ஸ் கம்மி.

விட்டா எஸ்.வி.சேகர் நாடகமெல்லாம் சிங்கிள் ஷாட்ன்னு சொல்லிருவீங்க போல இருக்கே. ட்ராக்கிங் ஷாட்டில் கேமராவும் முப்பரிமாணத்தில் பயணிக்கனும் :)