அமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்!

தெகாவுடனான விவாதம் நீண்டு விட்டதால் தனிபதிவாக இங்கே பதிகிறேன்!

http://thekkikattan.blogspot.com/2008/09/cheap-political-stunts.html


தெகா -

இத்தனை விரிவான பதில் தருவீர்கள் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. நீங்கள் ஏதோ இரண்டு பத்திகளில் பதில் தந்திருந்தால் “நன்றி, வணக்கம்!” போட்டுவிட்டு ஓடியிருப்பேன்! நிறுத்தி எழுதவைத்துவிட்டீர்கள்! இனி விவாதத்திற்கு நுழையலாம்!

>>>> இடுப்புக் கட்சையில் மாட்டிய இரட்டைக் குழல் டுப்பாக்கியும், கவ்பாய் தொப்பியும்

டெமாக்ரடிக் கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு அங்கம் இந்த மாதிரி உண்மைக்கு புறம்பான படிமங்களை உருவாக்குவது. ஆர்கன்ஸாசில் இருந்து வந்த பில் க்ளிண்டன் ஏதோ மேதாவி போலவும் அதற்கு அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து வந்த கற்ற அதிபரை ஏதோ கிரமத்தான் போலவும் ஒரு உருவத்தை உலாவ விட்டிருக்கிறார்கள். கமெடிசெண்ட்ரலில் இருந்து செய்திகளை அறிந்துகொள்ளும் வெகுஜனத்திற்கு இந்த பிம்பம் ஒரு நல்ல கேளிக்கையாகிவிட்டதுதான் அமெரிக்காவின் சோகம்.

>>>> ரஷ் லிம்பா மிக நேர்த்தியான விசயங்களை 610 ஏஎம்ல் சொல்கிறாரா, என்ன

நாணயத்தின் இருபக்கத்தையும் பார்க்க சொல்கிறேன். இருசாராரின் கூற்றில் எது உண்மை என்று நீங்களே ஆய்ந்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள். சிறந்த பேச்சாளராக கருதப்படும் பராக் ஏன் O'Reilly பேட்டிக்கு பல முறை அழைத்தும் ஓடி ஒளிந்தார்? மெக்கைய்னோ, பேலினோ MSNBC, NBC, ABC என்று எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நிபந்தனையற்ற பேட்டி கொடுக்கிறார்கள். பராக ஏன் அவ்வாறு தோன்ற மறுக்கிறார்? O'Reillyஇன் பேட்டியில் தோன்ற 9 மாதம் காக்கவைத்து பல நிபந்தனைகளுடன் தோன்றியது எதனால்? இதை மெக்கைய்ன் செய்திருந்தால் ‘நடு நிலை’ மீடியா எவ்வாறு திரித்திருப்பார்கள் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளவும்.

>>>>அப்ப இங்கேயிருந்து அனுப்பும் பொழுது அந்த ராணுவ ஆட்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க

இதற்கு இங்கு போருக்கு ராணுவ வீரர்களை recruit செய்யும் முறையும், போருக்குப்பின் திரும்பும் வீரர்களுக்கு வழக்கப்படும் சலுகைகளையும் பற்றி விரிவாக ஒரு பத்து பக்கத்திற்கு எழுதலாம். சுருக்கமாகக் கூறினால் இந்தியாவை போன்று ராணுவம் வீரர்களை தன் அமைப்பில் இங்கு அரசாங்க ஊழியர்களாக நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இங்கு இருந்து போருக்குச் சென்ற வீரர்கள் பராக் முன்பு கூறியதைப்போல (இப்போது தவறை உணர்ந்து 2013ல் என்று மாற்றிக்கொண்டார். அப்போது அவர் பதவியில் இருக்கமாட்டார் பாருங்கள் அந்த சௌக்கியம்தன்!) ஒரே வருடத்தில் திரும்பவந்துவிட்டால் இப்போது போருக்கு செலவழிப்பதைவிட 2-3 மடங்கு ஒரே வருடத்தில் செலவழிக்கவேண்டி வரும். வியட்னாம் போரினால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரியவில்லை, போர்வீரர்கள் திரும்பவந்ததால் என்ற வரலாறு தெரிந்தால் நான் சொல்வது புரியும்! இப்படி யோசிக்காமல் பேசிவிட்டு அந்தர் பல்டி அடித்ததைத்தான் மற்ற செய்திகளையும் பார்த்து தெரிந்துகொள்ளச்சொன்னேன். NAFTA, IRAN (& Pakistan), Economy போன்ற பல விஷயங்களிலும் இப்படி அனுபவமின்றி பேசி மாற்றிக்கொண்டதருணங்களையும் தேடிப்படியுங்கள். அதற்குப் பிறகு நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.


>>>இதற்கும் புஷ்சின் கொள்கைகளுக்கோ போருக்கோ எதாவது தொடர்பிருக்கிறதா?

இது நான் Mortgage கட்ட முடியாமல் போவதாக நீங்கள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அதற்கும் புஷ்சின் கொள்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்கக் கூறியிருந்தேன். You quoted that out of context in your reply! மீண்டும் அதையே கேட்கிறேன் புஷ்சின் பொருளாதாரக் கொள்கைக்கும் mortgageக்கும் என்ன சம்பந்தம்?

>>>>அவன் வேலை பார்க்கிற கம்பெனிகள் நஷ்டமடைஞ்சு அது மூலமா லே ஆஃப் ஆயி

இதற்கு தகுந்த ஆதாரம் தரமுடியுமா? Unemployment rate had been within the required amount throughout Bush's regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். I assume that you are aware that it is not possible and highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் ரஷ் லிம்பாக்கிடமோ ப்ரைன் வில்யம்ஸிடமிருந்தோ கேட்டு அறிந்ததில்லை நாமே ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டும்!


>>>>நானும் சொந்தத் தொழில் பண்ண ஆரம்பிச்சேன் >>>> கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கனக்கா போயிட்டே இருக்கு

உங்க தொழில் நொடிய புஷ்சின் அரசாங்கம் காரணமா? உங்கள் தொழில் நிலவரங்களை அலசாமல் இதைப்பற்றி எதுவும் என்னால் மேற்கொண்டு பேசமுடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் ஒரு அரசாங்கத்தின் Macroeconomical decisions directly affecting a small scale business like yours is news to me. மேலும் புஷ்சின் அரசாங்கம் சிறுதொழில் நடத்துபவர்களுக்கு சாதகமான பல திட்டங்களை வகுத்திருக்கிறது. தேவையானால் அதைப்பற்றி விரிவாக அலசலாம்!

>>>>கிளிண்டன் ஆட்சியில் ஆசை ஆசையாக தான் வாங்கிய வீட்டில் குடியிருக்க முடிந்திருந்தது

மீண்டும் தவறான செய்தி! புஷ்சின் ஆட்சியில்தான் அதிகமான அமெரிக்கர்கள் வீடுகளை வாங்கியிருக்கிறார்கள். http://www.census.gov/hhes/www/housing/hvs/annual07/ann07t13.html
உங்கள் அடுத்த கேள்வியை என்னால் ஊகிக்க முடியும் - Foreclosures:
வீடுகளை அதிகமான மக்கள் வாங்கினால் foreclosure களும் அதிகமாகத்தானே இருக்கும்? மேலும் இந்த foreclosureகளில் பாதிக்குப்பாதி second homes. அதாவது ஒரு வீட்டில் இருந்து கொண்டே முதலீட்டிற்காக வாங்கி விலை ஏறும் போது விற்றுவிடலாம் என்ற கனவில் வாங்கியவீடுகள். மேலும் the reason for foreclosure is the greed of the mortagage institutions and the individual applying for the loan and not that of the government என்பது வெள்ளிடை மலை. இதுவரை independent foreclosure data for the past 20 yrs எங்கும் கிடைக்கவில்லை. தற்போது RealtyTrac என்ற தனியார் நிறுவனமே அந்த தகவலை வெளியிடுகிறது (and that too only for the past few years). அதனால் அதை உபயோகிக்க யோசிக்கவேண்டி இருக்கிறது. இருந்தாலும்கூட அரசாங்கம் stimulus மூலம் foreclosureஐ தவிர்க்க உதவியும் வருகிறது! Free Market ஆதரவாளர்கள் இதுவே அதிகம் என்று கூறியிருக்கிறார்கள், அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

>>>>ஈராக் போர் நடக்காமல் இருந்திருந்தால் சதாம் ஐரோப்பிய யுரோ நாணயத்தை எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தியிருப்பார்.

என்று நான் சொல்லியதற்கு மனிதாபிமானம், நெஞ்சுல ஈரம்ன்னு எங்கேயோ போயிட்டீங்க. பொருளாதாரத்தில் இரக்கத்திற்கு இடமில்லை. நாளை இந்தியாவிற்கோ அமேரிக்காவிற்கோ ஏதாவது ஒரு தேவை ஏற்பட்டால் எந்த நாடும் சீந்தக்கூட செய்யாது. வல்லவன் வகுத்ததே சட்டம். மைக்ரோசாப்ட் போனால் கூகள் அதற்கு பிறகு யாரோ, இப்படி தொடர்ச்சியாக பரிணமித்துக் கொண்டே இருப்பதுதான் இயல்பு. சக இஸ்லாமிய நாடுகளே அமெரிக்காவுக்கு துணை நின்று ஈராக் போரை ஆதரித்த போதும் ஏன் நமக்கு மட்டும் நெஞ்சில் அதிக ஈரம் சுரக்க - are we freaks with extra glands attached to our so called நெஞ்சு? ப்ரான்ஸு மட்டுமே கொஞ்சமே எதிர்ப்பு காட்டியது. அதற்கு காரணம் அவர்கள் சதாமிடம் போட்ட ஒப்பந்தங்கள் வீணாகிவிடுமே என்ற கவலைதானே ஒழிய ஈராக் மக்கள் மீது கொண்ட கட்டற்ற அன்பினால் நெஞ்சு சுரந்தது அல்ல!

கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். நாளைக்கே ஏதாவது ஒன்று நடந்தால் நெஞ்சு ஈரம் உங்க குடும்பத்துக்கு ஒரு வாய் சோறுகூட போடாது! உங்கள் வீட்டில் இப்படி நடந்தாலும் இதையே பதிலாகத்தான் கூறுவீர்களா என்று வாதிக்கலாம். Well it is hypothetical! And my hypothetical answer would be NO - I would be outraged. ஆனால் அவ்வாறு நடக்கவில்லையாதாலால், why would I care as far as I get my bread and butter? பொதுநலம் என்ற பாசாங்கெல்லாம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் கைதட்டல் பெருவதற்கும் உதவலாம்.

எனக்குக்கூட அணுகுண்டுகளுக்கு பதிலாக பூச்செண்டுகளை கைமாற்றி புதுவசந்தக்காற்றை வீச செய்யவேண்டும் என்று அவா... ஆனால் உலகம் நமக்கு அல்வாதான் கொடுக்கும். The fact is everyone on their own. அதை ஏற்கும் முதிர்ச்சி அற்றவர்களை தள்ளி மிதித்துவிட்டு ஓடிக்கொண்டேதான் இருக்கும் உலகம்!