அமெரிக்க அரசியல் - தெகாவிற்கான பதில்!

தெகாவுடனான விவாதம் நீண்டு விட்டதால் தனிபதிவாக இங்கே பதிகிறேன்!

http://thekkikattan.blogspot.com/2008/09/cheap-political-stunts.html


தெகா -

இத்தனை விரிவான பதில் தருவீர்கள் என்று நிச்சயமாக நினைக்கவில்லை. நீங்கள் ஏதோ இரண்டு பத்திகளில் பதில் தந்திருந்தால் “நன்றி, வணக்கம்!” போட்டுவிட்டு ஓடியிருப்பேன்! நிறுத்தி எழுதவைத்துவிட்டீர்கள்! இனி விவாதத்திற்கு நுழையலாம்!

>>>> இடுப்புக் கட்சையில் மாட்டிய இரட்டைக் குழல் டுப்பாக்கியும், கவ்பாய் தொப்பியும்

டெமாக்ரடிக் கட்சியின் பிரச்சாரத்தின் ஒரு அங்கம் இந்த மாதிரி உண்மைக்கு புறம்பான படிமங்களை உருவாக்குவது. ஆர்கன்ஸாசில் இருந்து வந்த பில் க்ளிண்டன் ஏதோ மேதாவி போலவும் அதற்கு அருகில் உள்ள மாநிலத்தில் இருந்து வந்த கற்ற அதிபரை ஏதோ கிரமத்தான் போலவும் ஒரு உருவத்தை உலாவ விட்டிருக்கிறார்கள். கமெடிசெண்ட்ரலில் இருந்து செய்திகளை அறிந்துகொள்ளும் வெகுஜனத்திற்கு இந்த பிம்பம் ஒரு நல்ல கேளிக்கையாகிவிட்டதுதான் அமெரிக்காவின் சோகம்.

>>>> ரஷ் லிம்பா மிக நேர்த்தியான விசயங்களை 610 ஏஎம்ல் சொல்கிறாரா, என்ன

நாணயத்தின் இருபக்கத்தையும் பார்க்க சொல்கிறேன். இருசாராரின் கூற்றில் எது உண்மை என்று நீங்களே ஆய்ந்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள். சிறந்த பேச்சாளராக கருதப்படும் பராக் ஏன் O'Reilly பேட்டிக்கு பல முறை அழைத்தும் ஓடி ஒளிந்தார்? மெக்கைய்னோ, பேலினோ MSNBC, NBC, ABC என்று எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நிபந்தனையற்ற பேட்டி கொடுக்கிறார்கள். பராக ஏன் அவ்வாறு தோன்ற மறுக்கிறார்? O'Reillyஇன் பேட்டியில் தோன்ற 9 மாதம் காக்கவைத்து பல நிபந்தனைகளுடன் தோன்றியது எதனால்? இதை மெக்கைய்ன் செய்திருந்தால் ‘நடு நிலை’ மீடியா எவ்வாறு திரித்திருப்பார்கள் என்பதை நீங்களே யோசித்துக்கொள்ளவும்.

>>>>அப்ப இங்கேயிருந்து அனுப்பும் பொழுது அந்த ராணுவ ஆட்கள் எல்லாம் என்ன பண்ணிட்டு இருந்தாங்க

இதற்கு இங்கு போருக்கு ராணுவ வீரர்களை recruit செய்யும் முறையும், போருக்குப்பின் திரும்பும் வீரர்களுக்கு வழக்கப்படும் சலுகைகளையும் பற்றி விரிவாக ஒரு பத்து பக்கத்திற்கு எழுதலாம். சுருக்கமாகக் கூறினால் இந்தியாவை போன்று ராணுவம் வீரர்களை தன் அமைப்பில் இங்கு அரசாங்க ஊழியர்களாக நிரந்தரமாக சேர்த்துக்கொள்ளப்படுவதில்லை. இங்கு இருந்து போருக்குச் சென்ற வீரர்கள் பராக் முன்பு கூறியதைப்போல (இப்போது தவறை உணர்ந்து 2013ல் என்று மாற்றிக்கொண்டார். அப்போது அவர் பதவியில் இருக்கமாட்டார் பாருங்கள் அந்த சௌக்கியம்தன்!) ஒரே வருடத்தில் திரும்பவந்துவிட்டால் இப்போது போருக்கு செலவழிப்பதைவிட 2-3 மடங்கு ஒரே வருடத்தில் செலவழிக்கவேண்டி வரும். வியட்னாம் போரினால் அமெரிக்காவில் பொருளாதாரம் சரியவில்லை, போர்வீரர்கள் திரும்பவந்ததால் என்ற வரலாறு தெரிந்தால் நான் சொல்வது புரியும்! இப்படி யோசிக்காமல் பேசிவிட்டு அந்தர் பல்டி அடித்ததைத்தான் மற்ற செய்திகளையும் பார்த்து தெரிந்துகொள்ளச்சொன்னேன். NAFTA, IRAN (& Pakistan), Economy போன்ற பல விஷயங்களிலும் இப்படி அனுபவமின்றி பேசி மாற்றிக்கொண்டதருணங்களையும் தேடிப்படியுங்கள். அதற்குப் பிறகு நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும்.


>>>இதற்கும் புஷ்சின் கொள்கைகளுக்கோ போருக்கோ எதாவது தொடர்பிருக்கிறதா?

இது நான் Mortgage கட்ட முடியாமல் போவதாக நீங்கள் குறிப்பிட்டதை சுட்டிக்காட்டி அதற்கும் புஷ்சின் கொள்கைக்கும் என்ன சம்பந்தம் என்பதை விளக்கக் கூறியிருந்தேன். You quoted that out of context in your reply! மீண்டும் அதையே கேட்கிறேன் புஷ்சின் பொருளாதாரக் கொள்கைக்கும் mortgageக்கும் என்ன சம்பந்தம்?

>>>>அவன் வேலை பார்க்கிற கம்பெனிகள் நஷ்டமடைஞ்சு அது மூலமா லே ஆஃப் ஆயி

இதற்கு தகுந்த ஆதாரம் தரமுடியுமா? Unemployment rate had been within the required amount throughout Bush's regime. ஒரு நாடு சுபிட்சமாக, inflation இல்லாமல் இருக்க 4-6% unemployment rate இருக்க வேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறுகிறார்கள். I assume that you are aware that it is not possible and highly not recommended to bring the unemployment rate below this levels as it will trigger inflation! http://www.bls.gov/cps/cpsaat1.pdf இதில் கிளிண்டன் காலத்தையும் புஷ்சின் காலகட்டத்தையும் compare செய்து நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். இதையெல்லாம் ரஷ் லிம்பாக்கிடமோ ப்ரைன் வில்யம்ஸிடமிருந்தோ கேட்டு அறிந்ததில்லை நாமே ஆராய்ந்து தெரிந்துகொள்ளவேண்டும்!


>>>>நானும் சொந்தத் தொழில் பண்ண ஆரம்பிச்சேன் >>>> கழுதை தேஞ்சு கட்டெறும்பு ஆன கனக்கா போயிட்டே இருக்கு

உங்க தொழில் நொடிய புஷ்சின் அரசாங்கம் காரணமா? உங்கள் தொழில் நிலவரங்களை அலசாமல் இதைப்பற்றி எதுவும் என்னால் மேற்கொண்டு பேசமுடியாது. ஆனால் ஒன்று நிச்சயம் ஒரு அரசாங்கத்தின் Macroeconomical decisions directly affecting a small scale business like yours is news to me. மேலும் புஷ்சின் அரசாங்கம் சிறுதொழில் நடத்துபவர்களுக்கு சாதகமான பல திட்டங்களை வகுத்திருக்கிறது. தேவையானால் அதைப்பற்றி விரிவாக அலசலாம்!

>>>>கிளிண்டன் ஆட்சியில் ஆசை ஆசையாக தான் வாங்கிய வீட்டில் குடியிருக்க முடிந்திருந்தது

மீண்டும் தவறான செய்தி! புஷ்சின் ஆட்சியில்தான் அதிகமான அமெரிக்கர்கள் வீடுகளை வாங்கியிருக்கிறார்கள். http://www.census.gov/hhes/www/housing/hvs/annual07/ann07t13.html
உங்கள் அடுத்த கேள்வியை என்னால் ஊகிக்க முடியும் - Foreclosures:
வீடுகளை அதிகமான மக்கள் வாங்கினால் foreclosure களும் அதிகமாகத்தானே இருக்கும்? மேலும் இந்த foreclosureகளில் பாதிக்குப்பாதி second homes. அதாவது ஒரு வீட்டில் இருந்து கொண்டே முதலீட்டிற்காக வாங்கி விலை ஏறும் போது விற்றுவிடலாம் என்ற கனவில் வாங்கியவீடுகள். மேலும் the reason for foreclosure is the greed of the mortagage institutions and the individual applying for the loan and not that of the government என்பது வெள்ளிடை மலை. இதுவரை independent foreclosure data for the past 20 yrs எங்கும் கிடைக்கவில்லை. தற்போது RealtyTrac என்ற தனியார் நிறுவனமே அந்த தகவலை வெளியிடுகிறது (and that too only for the past few years). அதனால் அதை உபயோகிக்க யோசிக்கவேண்டி இருக்கிறது. இருந்தாலும்கூட அரசாங்கம் stimulus மூலம் foreclosureஐ தவிர்க்க உதவியும் வருகிறது! Free Market ஆதரவாளர்கள் இதுவே அதிகம் என்று கூறியிருக்கிறார்கள், அதில் எனக்கு உடன்பாடு உண்டு.

>>>>ஈராக் போர் நடக்காமல் இருந்திருந்தால் சதாம் ஐரோப்பிய யுரோ நாணயத்தை எண்ணெய் வர்த்தகத்திற்கு பயன்படுத்தியிருப்பார்.

என்று நான் சொல்லியதற்கு மனிதாபிமானம், நெஞ்சுல ஈரம்ன்னு எங்கேயோ போயிட்டீங்க. பொருளாதாரத்தில் இரக்கத்திற்கு இடமில்லை. நாளை இந்தியாவிற்கோ அமேரிக்காவிற்கோ ஏதாவது ஒரு தேவை ஏற்பட்டால் எந்த நாடும் சீந்தக்கூட செய்யாது. வல்லவன் வகுத்ததே சட்டம். மைக்ரோசாப்ட் போனால் கூகள் அதற்கு பிறகு யாரோ, இப்படி தொடர்ச்சியாக பரிணமித்துக் கொண்டே இருப்பதுதான் இயல்பு. சக இஸ்லாமிய நாடுகளே அமெரிக்காவுக்கு துணை நின்று ஈராக் போரை ஆதரித்த போதும் ஏன் நமக்கு மட்டும் நெஞ்சில் அதிக ஈரம் சுரக்க - are we freaks with extra glands attached to our so called நெஞ்சு? ப்ரான்ஸு மட்டுமே கொஞ்சமே எதிர்ப்பு காட்டியது. அதற்கு காரணம் அவர்கள் சதாமிடம் போட்ட ஒப்பந்தங்கள் வீணாகிவிடுமே என்ற கவலைதானே ஒழிய ஈராக் மக்கள் மீது கொண்ட கட்டற்ற அன்பினால் நெஞ்சு சுரந்தது அல்ல!

கொஞ்சம் கடுமையாகத்தான் இருக்கும். நாளைக்கே ஏதாவது ஒன்று நடந்தால் நெஞ்சு ஈரம் உங்க குடும்பத்துக்கு ஒரு வாய் சோறுகூட போடாது! உங்கள் வீட்டில் இப்படி நடந்தாலும் இதையே பதிலாகத்தான் கூறுவீர்களா என்று வாதிக்கலாம். Well it is hypothetical! And my hypothetical answer would be NO - I would be outraged. ஆனால் அவ்வாறு நடக்கவில்லையாதாலால், why would I care as far as I get my bread and butter? பொதுநலம் என்ற பாசாங்கெல்லாம் எழுதுவதற்கும் படிப்பதற்கும் கைதட்டல் பெருவதற்கும் உதவலாம்.

எனக்குக்கூட அணுகுண்டுகளுக்கு பதிலாக பூச்செண்டுகளை கைமாற்றி புதுவசந்தக்காற்றை வீச செய்யவேண்டும் என்று அவா... ஆனால் உலகம் நமக்கு அல்வாதான் கொடுக்கும். The fact is everyone on their own. அதை ஏற்கும் முதிர்ச்சி அற்றவர்களை தள்ளி மிதித்துவிட்டு ஓடிக்கொண்டேதான் இருக்கும் உலகம்!

17 comments:

said...

யு. எஸ். தமிழன்,

நன்றாகவே எழுதி விளக்கியிருக்கிறீர்கள்.

ஆனால் வேறு வேறு துருவத்தில் நிற்பது போலவும், ஒரே பட தலைப்புடன் உள்ள ஒரு படத்தை இரு வேறு கோணங்களில் காண்பது போலவும் உள்ளது, உங்களுடைய பதிலை படிக்கும் பொழுது.

உலகமே ஒத்துக் கொண்ட ஒரு தவறை எப்படி நியாயப்படுத்தி, அதனை செல்லுபடியாக்கியும் காமிக்க முடியுமென்று இது போன்ற பதில்களை படிக்கும் பொழுது தெரிந்து கொள்கிறேன்.

சரி, புஷ்ஷுன் ஆட்சி காலத்தில் நடத்திய நிகழ்வுகளணைத்தும் நாட்டின் நன்மைக்கெனவும், உலகத்தின் அமைதிக்கெனவுமென்றால் ஏன் நடந்த முடிந்த "ரிபப்ளிகன் நேஷனல் கன்வென்ஷனில்" வந்து நேரடியாக தலைகாட்ட முன் வரவில்லை, புஷ் மற்றும் டிக் ச்சினி? புயல் அடித்தது அதனை மானிட்டர் பண்ணப் போனதால் வரவில்லை என்று கூறுவது, சரியான பதிலாக இருக்காது என்றே நினைக்கிறேன்.

எனிவே, எனக்கு எங்கு இருப்பினும் அரசியல் பிடிக்காத ஒரு விசயமாக இருந்தே வந்திருக்கிறது. ஆனால், அமெரிக்காவில் இருக்கும் பொருட்டு இங்கு இன்று எடுக்கப்படும் ஒரு முடிவு நேரடியாக நாளையே அதன் பலனை காட்டி வருவதால் சற்றே எனது கவனத்தையும், இரத்த அழுத்தத்தையும் பதம் பார்த்து வருகிறது.

மற்றபடி எனக்கு இந்த அரசியல் வாதிகளும் அவர்கள் போடும் தகிடுதத்தங்களும் தனிப்பட்ட முறையில் உவப்பாக இல்லை. எப்படியோ, யார் எடுக்கும் முடிவாகினும் நாட்டிற்கும், நாட்டு மக்களூக்கும் அமைதியையும், நற் பெயரையும் ஈட்டித் தந்தால் நலமே, என்று கூறி விடைபெற்றுக் கொள்கிறேன், இந்தப் பதிவினையொட்டி.

தங்களின் தனிப் பதிவிற்கும் ஓர் நன்றி, யு. எஸ். தமிழன்.

Anonymous said...

நல்ல பதிவு.நன்றி.

said...

தெகா -

உங்கள் வருகைக்கு நன்றி!

>>>> உலகமே ஒத்துக் கொண்ட ஒரு தவறை எப்படி நியாயப்படுத்தி, அதனை செல்லுபடியாக்கியும்

உலகம் வந்து நம் வரியைக் கட்டிவிடப்போவதில்லை. நாளையே நமது வரி 35% ஆக உயர்ந்துவிட்டால் நாம்தான் செக் எழுதவேண்டும். அமெரிக்காவைப் பார்த்து பொறாமைப்படும் நாடுகளின் கருத்துக்களால் நமக்கென்ன பயன்?

>>>> இது போன்ற பதில்களை படிக்கும் பொழுது தெரிந்து கொள்கிறேன்.

வெகுஜன ஊடகத்தையோ Alternate Media வையோ மேற்கோள் காட்டி எங்குமே நான் விவாதத்தை முன்னெடுத்துச்செல்லவில்லை. The numbers are taken from reputed organizations and you could verify for yourself. ஆனால் இதையெல்லாம் உதாசினப்படுத்தி நம் ஆராயும் புத்தியையே மழுங்கடிக்கும் வேலையைத்தான் மீடியாக்கள் செய்து கொண்டிருக்கின்றன.

>>>> "ரிபப்ளிகன் நேஷனல் கன்வென்ஷனில்" வந்து நேரடியாக தலைகாட்ட முன் வரவில்லை,

அது கண்டிப்பாக அரசியல் காரணங்களால்தான். அவர் வந்திருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா? With his dwindling popularity it was a smart move that he did not come and any party would have done the same.

அருமையான விவாதத்திற்கு வித்திட்டதற்கு உங்களுக்கும் என் நன்றி!

said...

//பொருளாதாரத்தில் இரக்கத்திற்கு இடமில்லை. நாளை இந்தியாவிற்கோ அமேரிக்காவிற்கோ ஏதாவது ஒரு தேவை ஏற்பட்டால் எந்த நாடும் சீந்தக்கூட செய்யாது//
சத்தியமான உண்மை.இந்த சமூகச் சூழலில் தனிமனித குடும்பங்களுக்கு என்ன நேருமோ அதுதான் நாடுகளுக்கும்.

said...

---பேலினோ MSNBC, NBC, ABC என்று எல்லா தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நிபந்தனையற்ற பேட்டி கொடுக்கிறார்கள்---

பேலின் கூப்பிட்டு பேட்டி தருகிறாரா? இரண்டு வாரமாக தயார் செய்தும் 'நான் மெக்சிகோ போயிருக்கிறேனே சார்லீ' என்று பீற்றிக் கொண்ட நேர்காணலை பார்த்தீர்களா?

said...

>>>>பேலின் கூப்பிட்டு பேட்டி தருகிறாரா?

கூப்பிட்டு பேட்டிதரவேண்டியதில்லை ஆனால் கூப்பிட்ட பேட்டியை தப்பாமல் காலம்தாமதிக்காமல் தந்தாரா இல்லையா? அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களும், அவை டெமாக்ரட்ஸ் சார்பு உடையவை என்பது தெரிந்தும் குடியரசுக் கட்சி பேட்டி கொடுக்கிறார்களே அதை பற்றி ஒண்ணுமே சொல்லலையே பாபா?
அஞ்சா நெஞ்சன், வாய்ச்சொல் வீரர் பராக், O'Reilly இன் பேட்டியில் தோன்றுவதற்கே பல மாதங்கள் கெஞ்சி பல நிபந்தனைகளுக்குப் பிறகுதானே தோன்றினார்? இந்த Double Standard எல்லாம் உங்க கண்ணுக்கு தெரியலையா?
”புஷ்சின் Doctrine" என்று மொட்டையாக கேள்வி வீசிவிட்டு அதற்கு விவரம் கேட்டால் அவருக்கு Foreign Policyயே தெரியாது என்பது எத்தனை முட்டாள்தனம்?

>>>>இரண்டு வாரமாக தயார் செய்தும் 'நான் மெக்சிகோ போயிருக்கிறேனே சார்லீ' என்று பீற்றிக் கொண்ட நேர்காணலை பார்த்தீர்களா?

நிச்சயமாக! அதைப்பார்க்காமல் இருப்பேனா. அதற்கு முன்பு O'Reillyன் பேட்டி துவக்கத்தில் புஷ்சின் Tax cut கிளிண்ட்டனின் அதிக வரி வசூலிக்கும் கொள்கையைக்காட்டிலும் அதிக வருவாயை ஈட்டியுள்ளது என்று உண்மையை நேருக்கு நேராக கேட்டபோது அஞ்சாநெஞ்சர் கொடுத்த மலுப்பல் பதிலையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

சரி கேள்விக்கு வரலாம் - இதில் பீற்றி கொண்டது எங்கிருக்கிறது? வெளிநாடுகளுக்கு போய்யிருக்கிறீர்களா என்ற கேள்விக்கு அவர் மெக்ஸிக்கோ, குவைத், ஜெர்மனி சென்று வந்ததைக் குறிப்பிட்டார். அது எப்படி ஒரு தெளிவான நேரடிக்கேள்விக்கு நேரடிப்பதில் டெமாக்ரட்ஸ் கண்களுக்கு “பீற்றிக்” கொள்வதைப்போல தெரியுமோ?

இந்த நாணயத்தின் மறுபக்கங்களையும் பார்க்கலாம்
- பேலின் கூறியதுபோல பல துணை ஜனாதிபதிகள், diplomatic வெளிநாட்டுப் பயணங்களோ அல்லது polical figuresகளையோ சந்தித்திருக்கக் கூடிய சூழ்நிலை இருக்காது. அதை பேலின் பேட்டியின் போதே தெரிவித்தாரே கவனிக்கவில்லையா? அதற்க்கான அவசியமும் இல்லை என்பதை சார்லியும் ஒப்புக்கொண்டாரே? முழுபேட்டியையும் பார்த்தீரா இல்லை Snippets மட்டுமா? :). ஆனால் ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு இந்த அனுபவம் மிகவும் அவசியம்.

இதை மனதில் கொண்டுதான்
- பராக் சில மாதங்களுக்கு முன்புதான் அதுவும் தான் டெமாக்ரட்டிக் வேட்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின்புதான் அவசியமே இல்லாமல் அவசர அவசரமாக ஈராக், ஜெர்மனி என்று இதே மீடியாக்கள் புடை சூழ சென்று வந்ததை “பீற்றி”க் கொள்வதாக உங்களுக்குத் தெரியவில்லையா? (And if my memory serves right, that was his first ever visit to meet the troops in his term as Senator). பராக்கும் டெமக்ராட்ஸுக்கும் தெரியும், நாளை விவாதம் துவங்கும் போது இந்த கேள்வி அவர்களை கொன்றுவிடும் என்று அதனால்தானே ஐயா அந்த மீடியாவுடன் அவர் போட்டோக்களை பிரத்யேகமாக வெளியிட்டு “பீற்றி”க் கொள்ள ஒரு இண்டர்நேசனல் டூர்? Try to understand the context here - All 3 leading medias had sent their own crue along with Obama to cover his "foreign" visit - a privilege even The President of the United States had not deserved (including Mr. Clinton). Just for kicks - How many times had any of these television channels accompanied McCain in his numerous trips to Iraq (or any other foreign soil he had visited)? I am not asking the count of all his visits when he was a senator because it might not be fair but give the count after he had been confirmed the republican candidate?

Another popular myth the democrats had spread is that only republicans launch personal attack, now what are they doing to Palin?
- Why couldn't they digest the fact that she is MORE experienced than their savior Barack?
- Why do they attack that she was just a small town mayor or Governor of a "scantily" populated state?
- Why can't they accept the fact that a woman with 5 children had managed to balance her career as a Governor and implemented money saving reforms in the state of Alaska?
- Why do they blow her 20K per-Diem as inappropriate when she had saved 440K in travel budget compared to the previous governor?
- Why do they mis-quote her discussion with the librarian as if she would ban every progressive books in the US?

Well, you got the point, right?

said...

Errata:

பேலின் கூறியதுபோல பல துணை ஜனாதிபதிகள்


should be read as

பேலின் கூறியதுபோல பல துணை ஜனாதிபதி வேட்பாளர்கள்

said...

பதில்கள் அருமை ;-)

தனியாகப் பதிவெழுதி பேலின் குறித்த புலம்பலைத் தொடர்கிறேன் :))

முகமது பாருக் said...

அருமையான பதிவு நாங்கள் நினைத்ததை எழுதி உள்ளீர்கள்...

//எனக்குக்கூட அணுகுண்டுகளுக்கு பதிலாக பூச்செண்டுகளை கைமாற்றி புதுவசந்தக்காற்றை வீச செய்யவேண்டும் என்று அவா... ஆனால் உலகம் நமக்கு அல்வாதான் கொடுக்கும். The fact is everyone on their own. அதை ஏற்கும் முதிர்ச்சி அற்றவர்களை தள்ளி//

இதற்க்கு உன்னொரு வார்த்தையும் உண்டு "காலத்தின் கட்டாயம்"

said...

நன்றி பாருக்!

உங்களுக்கு வலைப்பதிவு ஏதேனும் உண்டா?

said...

// சக இஸ்லாமிய நாடுகளே அமெரிக்காவுக்கு துணை நின்று ஈராக் போரை ஆதரித்த போதும் ஏன் நமக்கு மட்டும் நெஞ்சில் அதிக ஈரம் சுரக்க - are we freaks with extra glands attached to our so called நெஞ்சு? ப்ரான்ஸு மட்டுமே கொஞ்சமே எதிர்ப்பு காட்டியது. அதற்கு காரணம் அவர்கள் சதாமிடம் போட்ட ஒப்பந்தங்கள் வீணாகிவிடுமே என்ற கவலைதானே ஒழிய ஈராக் மக்கள் மீது கொண்ட கட்டற்ற அன்பினால் நெஞ்சு சுரந்தது அல்ல//

முற்றிலும் உண்மை நீங்கள் ப்ரான்ஸூ பற்றி கூறியது.

அது போல இதுவும் உண்மைதான், வெறியாட்டம் ஆடிக்கொண்டிருக்கும் புஷ்க்கு பயந்தே எல்லா இஸ்லாமிய நாடுகளும் ஈராக் போரை ஆதரித்தன. ஆதரிக்காவிடின் ஓஸாமா ஆதரிக்காத அந்த நாட்டிற்குள் குடியேறி இருப்பார். அவரை பிடிக்க அந்த நாட்டையே பலியிட வேண்டியிருக்கும்.
இவையெல்லாம் நீங்களும் அறிந்ததே.

said...

நன்றி ஜமால்!

>>>>புஷ்க்கு பயந்தே

இது ஓரளவிற்கே ஒத்துக்கொள்ளவேண்டும். சவுதி போன்ற நாடுகளுக்கு (குறைந்தபட்சம் அதன் ராஜ வாரிகளுக்கு) ஈராக் ஒரு அச்சுறுத்தலாகவே இருந்து வந்துள்ளது. ஈராக்கின் எண்ணெய் வளம் மற்றும் அதன் வளர்ச்சி சவுதியின் எண்ணெய் விலை நிர்ணய சட்டாம்பிள்ளைதனத்திற்கு பங்கம விளைவிப்பதாக இருந்தது. சவுதி நினைத்திருந்தால் குறைந்தபட்சம் சதாமின் உயிரையேனும் காத்திருக்க முடியும். அவ்வாறு செய்யாததே அவர்களின் சதாம் எதிர்ப்பை அறிந்துகொள்ளலாம்.

சவுதி நினைத்திருந்தால் தன் பணத்தை எல்லாம் அமெரிக்க வர்த்தகத்திலிருந்து விலக்கிக்கொள்வதாக கூறி அமெரிக்காவையே பயம்காட்டியிருக்கலாம். சவுதியால் அமெரிக்கவிற்கு பொருளாதார நெருக்கடி கொடுக்கமுடியும்.

சவுதியால் இப்படி பல ”லாம்”களை நடத்த முடியும், நடத்தாததிற்கு காரண “Greed" என்பதைத் தவிர வேறென்ன?

said...

யு எஸ் தமிழரே,

அசத்தலாக எழுதியிருக்கிறீர்கள்.

உங்களுடைய பெரும்பாலான வாதங்கள் ஏற்புடையவையே.

said...

வருகைக்கு நன்றி ஸ்ரீதர்!

எனது கருத்துடன் நீங்கள் ஒத்துப்போவதை அறிந்து மகிழ்ச்சி.

;)

Anonymous said...

At you inquisitive mind :)

Anonymous said...

I think, that you are mistaken. Let's discuss it.

said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in