அமெரிக்காவில் கோவில்களை கட்டிக்குவிக்கிறோம். கோயிலில்லாத ஊரில் குடிபுகாதே என்று சொன்னதை வேதமாக கருதி, குடிபுகுந்த ஊரிலெல்லாம் கோவில் கட்டிக்குவிக்கிறோம். கோவில்கள்தான் எங்களின் நாளைய பொலிடிகல் சென்டராக மாற்றிவருகிறோம். வாரத்தில் ஐந்து நாட்கள் வெளிநாட்டுகாரனுக்கு அர்த்த ராத்திரிகளில் ஆணி புடுங்கியும், செய்த தப்புக்கணக்கை அதிகோணலாக்கும் ஆடிட்டராகவும், ஏதோ ஒரு மருத்துவமனையில் கிழட்டு hypochondriac அமெரிக்கர்களின் கேள்விகளுக்கு பல்லைக் கடித்துகொண்டே இன்முக பதில்கள் சொல்லியும் சுயத்தை இழந்த எங்களின் இறந்த ஈகோவைத்தூக்கிநிறுத்த பிரசிடண்ட், ஜெனரல் செக்ரட்டரி, போர்ட் ஆஃப் டரஸ்டி போன்ற பதவி பந்தாக்கள் தேவைப்படுகிறது. அதற்காகவே கோவில்களை உருவாக்குகிறோம். எங்கள் ஈகோவைக்காட்டிலும் இருமடங்குடைய பிரம்மாண்ட கோவில்களை உருவாக்குகிறோம். எங்கள் மனைவிமார்கள் எங்களுக்கு தெரியாமல் அனுப்பிய பணத்தில் மாமனார்/மாமியார் நல்லி குப்புசாமி செட்டியார் கடையில் தீபாவளி தள்ளுபடியில் வாங்கித்தரும் 'காஞ்ஜிபுர' பட்டு புடைவையையும், சேட்டு மாப்பிள்ளையைப் போல இருப்போம் என்ற கனவில் வாங்கி ராமராஜன் மாதிரி எங்களை தனித்துவமாய் மிளிரச்செய்யும் குர்த்தாக்களையும் பெருமையாய் அணிந்து மற்றவர்களுக்கும் காட்ட கோயிலுக்கு போவது எங்களுக்கு அவசியமாகிறது.
அமெரிக்க கோயில்கள் ஒரு பணம் தயாரிக்கும் இயந்திரம் என்பதை பல இந்திய (படிப்பறிவில்லாத ரெசிடண்ட் இண்டியன்ஸ் என்று வாசிக்க தாழ்மையுடன் வேண்டுகிறேன்) மக்கள் அறிவதில்லை. மல்டி மில்லியன் டாலர் கையிருப்பு வைத்திருக்கும் அமெரிக்கர்களுக்கே வீட்டுக் கடன் வாங்குவது சிரமமாய் இருக்கும் இன்றைய காலகட்டத்தில்கூட கோவில் கட்ட மில்லியன் மில்லியனாய் பணம் இறைக்க அமெரிக்க வங்கிகள் வரிசைகட்டி ஏலம் கோரி நிற்பதாக ஹேஸ்யங்கள் பல உண்டு. உண்டியல் கலெக்ஷன் தவிர ஆயுஷ்ஹோமம், ம்மிருதுஞ்ஜய ஹோமம், கண்பத் ஹோமம், ஸ்ரீசக்ர சுதர்ஷண ஹோமம், ஸ்ரீ ஷுக்த ஹோமம், சத்யநாரயண பூஜா, வாஹன பூஜா, க்ரஹப்பிரவேஷா, அஷ்டோத்தரம், ச்ஹாலிசா, ஆரத்தி என்று பல வழிகளில் பணம் செய்து கடனை குறிப்பிட்ட காலத்திற்கு முன்பாகவே கட்டி முடித்துவிடுவார்கள் என்று அமெரிக்க வங்கியினர் ரிஸ்க் அனாலிசிஸ் செய்த பிறகே இந்த முடிவுக்கு வந்திருப்பார்கள் என்று உங்களுக்கு நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை. நாங்களும் கோயில் கடன் அடைபட்டதும் அதை விரிவாக்க மீண்டும் கடன்வாங்கி இன்னும் நிறைய விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்து எங்கள் பத்தியையும் கோயில் கல்லாக்களையும் விஸ்தாரமாக்குகிறோம்.
ஊரிலிருந்து வரும் உறவினர்களை அழைத்து சென்று திருப்பதியைவிடவும், தில்லையைவிடவும் இங்கு அர்ச்சகர்கள் யாருக்கும் புரியாத மந்திரத்தை அழுத்தமாக உச்ச்சரிப்பதை பெருமையாய் காட்ட எங்களுக்கு கோவில் தேவை என்பதை நீங்கள் அறிந்திருக்க நியாயமில்லை. உடுப்பி உணவகத்தில் தண்ணீரின் அடர்த்தியுடன் சாம்பார் போன்ற ஏதோ ஒரு வஸ்துவுடன் 7.45 டாலருக்கு வழங்கப்படும் அதே தரத்துடன் ஏன் அதைவிட சற்றே தரமான பொங்கல், சாத்தமுது, இறக்குமதி செய்யப்பட்ட MTR பொடியில் தயாரித்த வறுத்த வேர்க்கடலை சேர்த்த பாசுமதி அரிசியில் தயாரான புளியோதரை, யாரோ கன்னட/தெலுகு பத்தகோடி சத்யநாரயணா பூஜைக்கு தயாரித்த நெய்யையும் திரட்சைமுந்திரியையும் தேவைக்கு அதிகமாக சேர்த்தும் காய்ந்த கேசரி, வழிதவறி வந்த யாரோ நார்த் இந்தியன் விட்டுச்சென்ற சின்ன பூந்தியில் செய்த லட்டு என்று எல்லாம் கலந்தடிக்கும் பாக்யத்திற்காவும் கூட கோயில் கட்டுகிறோம். ஊரில் சிவராத்திரிக்கு சன் டிவியில் திராபைப்படமான ‘சச்சின்' பார்த்துக் நீங்கள் கொண்டாடிக்கொண்டிருக்கும் அதே வேளையில் 108 சிவலிங்களுக்கு இந்தியாவிலிருந்து தருவிக்கப்பட்ட சந்தன அபிஷேகமும் வால்மார்ட்டில் வாங்கிய கொழுப்பு நீக்கப்பட்ட பாலாபிஷேகமும் செய்து ஸ்ரீ ருத்ரத்தை விடிய விடிய வாய்கிழிய எமக்கு அடுத்து அமர்ந்திருப்பவரை விட சற்றே நல்ல உச்சரிப்புடனும் தெம்புடனும் பாடுவதாகா பாவ்லா செய்வதற்குக் கூட எங்களுக்கு கோயில்கள் அவசியம்தான்.
நாராயணனின் மகள் ப்ரொமிற்கு யாரோ கருப்பனுடன் வந்திருந்ததை ஸ்டார்ட்-அப் கம்பெனி CTOவின் மகனுடன் சென்ற எங்கள் அந்திம்பேரின் மகள் சொன்னதையும், சென்னைக்கு அருகே உள்ள குக்கிராமத்திற்கும் அருகிலுள்ள பட்டிக்காட்டில் நாங்கள் 7 வருடங்களுக்கு முன்பு வாங்கிய 77.29 லட்சம் பெருமானமுள்ள மனைக்கு அருகில் இருந்த அதே அளவு மனை இப்போது 3.22 கோடிக்கு விலைபோவதையும், எதிர் வீட்டு கேத்தி எங்கள் தோட்டத்து டேலியாப் பூக்களையும் எங்கள் கருங்கூந்தலை வியந்ததையும், நெப்ராஸ்காவிற்கோ வயோமிங்கிற்கோ யுனிவர்சிட்டி டீன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததால் மட்டுமே மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியுட்டில் கிடைத்த இடத்தை மறுத்து பேச்சுலர்ஸ் டிகிரி படிக்க சென்றிருக்கும் மூத்தவன் பற்றியும், 2419 பேர் படிக்கும் பள்ளியில் 7 மாணவர்கள் உறுப்பினராக உள்ள மனக்கணிதம் மற்றும் எறும்பு சேமிப்பு டீமில் இளைய மகள் முன்னணியில் இருப்பதை பகிர்வதற்கும், சுதர்ஷனுக்கு வேலை போனதால் அவன் மனைவி அகிலா கே-மார்ட்டில் மணிக்கு 6.55 டாலருக்கு பொட்டலம் கட்டுவதை ரேஷ்மா பார்த்ததையும், ஒவ்வொரு முறையும் ரம்யா பாட்லாக் பார்ட்டிகளுக்கு தயிர்சாதத்தையே கொண்டுவரும் கஞ்சத்தனத்தையும் அதையும் கூட அவள் கணவர்தான் சமைக்கிறார் என்ற இரகசியத்தையும் உங்களிடம் தொலைப்பேசியிலா தெரிவிக்க முடியும்?
இது தவிர இந்தியாவிலிருந்தும், ஈழம், கரிபியன், ஆப்பிரிக்கா, தென்கிழக்காசியா ஆகிய பகுதிகளில் இருந்தும் அவ்வப்போது விசிட்டிங் தெரபி அளிக்கும் இண்டர்நேசனல் ஆன்மிக டாக்டர்களை அழைத்து தாய்மண் பாசத்தில் நொஸ்டால்ஜிக்காய் அலையும் மாமா மாமிகளையும் அவர்களின் ஹிப்-ஹொப் நவநாகரீக Dudes and Chiksஐ வேண்டாவெறுப்பாய் அமர்த்தி சம்பந்தமே இல்லாத கதைகளை சத்சங் என்ற பெயரில் ராவி, டண்டக்கு டண்டக்கு 5-D டால்பி இசையில் பஜனை பாடவைத்து நாங்கள் பத்தி பரவசத்தில் மிதந்து ஆடும் போதே உண்டியல் குலுக்கினாலும் அதிலும் டாலர்களை சொருகி, ஏதோ சான்ஸ் போன பாடகர் இலவசமாய் பாடிக்கொடுத்த இசைவட்டு, படிக்கவே மாட்டார்கள் என்ற தைரியத்தில் எழுதிக் குவித்த பத்திக்குப்பைகள், இந்தியாவில் ஏதோ நோஞ்சான் குழந்தை கழிப்பிட வசதியற்ற கிராமத்தில் செய்த கைவினைப்பொருட்கள், பல கோணங்களில் அருள்பாலிக்கும் நான்கங்குல பித்தளை விக்கிரகங்கள் (அதவிட பெருசா இருந்தா உம்மாச்சி கண்ண புடுங்கிடும்) என்று அனைத்தையும் அநியாய விலைக்கு வாங்கிவிட்டு மாதா மாதம் எரிதங்களை அனுப்ப முகவரியையும் இமெயில் ஐடியும் கொடுத்தே டாட்டா காட்டி திருப்பி அனுப்புகிறோம்.
மற்றும் எங்கள் நிரிழிவு, இதயக்கோளாறு, சொத்து தகறாறு, திருமணம், பிள்ளைகள், நோய்கள், உறவுமுறை சிக்கல், தொழில், நீதி மன்ற விவகாரங்கள், வாஸ்த்து, பில்லி சூன்யம், மனச்சிதைவு இவ்வளவு ஏன் கான்சர் போன்ற அனைத்து மனித மலச்சிக்கலுக்கும் இஙகேயே ரெசிடண்ட் சாமியார்களையும் ஊக்குவிக்க தயங்குவதில்லை. அவ்வப்போது Little India வில் வரும் ஜார்ஜியாவைச்(?) சேர்ந்த ”டாக்டர் கமேண்டர் சித்தர் செல்வம்” மற்றும் லண்டனைச் சேர்ந்த “பீர் சையது சாஹேப்” அவ்ர்கள் எல்லாம் எங்களைப் போன்ற திக்கற்றவர்களுக்கு திசைக்காட்டும் மகர ஜோதிகளாய் அவதரித்தவர்கள் என்பதையும் எய்ட்ஸ் முதல் ENT நோய்கள் வரை சர்வ நோய் தீர்க்கும் சக்தி பெற்றிருக்கிறார்கள் என்பதையும் சத்தியமாய் நம்பும் புண்யாத்மாக்கள் நாங்கள். படித்ததாய் நம்பப்படும் நாங்கள் இவர்களை அன்றாடம் நாடி செழிப்போடும் வளமோடும் வாழ்வாங்கு வாழ்ந்து நோய்பல தீர்த்த இந்த மகான்களையும் அர்த்த புஷ்டியுடம் செழிப்படையச்செய்கிறோம்.
காசைக்கொடுத்து கடவுளை வாங்குகிறோம்!
******
சிக்கலில் செல்வம்:
பீர் சையது சாஹேப்:
http://mannat123.blogspot.com/2005/03/have-any-problems.html
Subscribe to:
Post Comments (Atom)
22 comments:
ஆனமல!ஆனமல வெள்ளக்காரன் உன்ன ரெண்டு தடவ கூப்பிட்டுட்டான்.இன்னும் ஒரு தடவதான் பாக்கி.
கூடவே அதிருதில்லயும் கை தட்டிடுச்சுங்க:)
http://fraudselvam.blogspot.com/
போட்டுத் தாக்கு!!!
கடன் வாங்கி கோயில் கட்டறது தவிர மத்ததெல்லாம் படம்புடிச்ச மாதிரி சொல்லியிருக்கீங்க.
ஆமா, நெசமாவே கடன் வாங்கித்தான் கட்றாங்களா? ஏன்னா, எங்கூரு கோயிலெல்லாம் மெதுவா உண்டியல எண்ணி எண்ணி ஒவ்வொரு சாமிக்கா கட்டினாங்க. அதான்.
@ராஜ நடராஜன்
நம்ம மக்களையும் சொல்லனும். எவ்வளவு படிச்சிருந்தாலும் புதுசா ஒரு சாமியார்/ரினி வந்தா சாஷ்டாங்கமா கால்ல விழுந்திடுறாங்க!
@அனானி1: அந்த பதிவைப்பார்த்தேன்... கொடுமை!
@அனானி2: எனக்குத்தெரிந்து பாஸ்டன் ஸ்ரீலஷ்மி கோவிலைத்தவிர மற்ற எல்லா மாநில பெரிய கோவிலும் மில்லியன் டாலருக்கு மேல் கடனில் கட்டப்பட்ட கோயில்கள்தான். நியு ஹம்ப்ஷயர் சரஸ்வதி மந்திரம் கோவிலைப்பற்றி குகளிட்டுப் பாருங்கள்! நீங்க எந்த ஊரு?
COMMANDER SELVAM THE FRAUD:
http://www.soulcast.com/post/show/141922/How-did-a-cheat-%22Dr.-Commander%22-Selvam-%22Siddhar%22-enter-USA%3F-Ask-Nadadur-S-Kumar
http://addicted.sulekha.com/blog/post/2008/04/promising-huge-return-annamalai-fraud-cheated-thousands.htm
நிறைய பேர் ஏமாந்திருக்கிறார்கள் போல. அனானீஸ் நிங்க பாதிக்கப்பட்டிருப்பது புரியுது ஆனா கெட்ட வார்த்தைகளை அனுமதிக்க முடியாது - மன்னிச்சுக்கோங்க!
கோவையில் செல்வம் பைனான்ஸ்ன்னு வச்சு மக்களை ஏமாற்றியிருக்கிறார் என்கிறார்கள். எனக்கு நினைவில்லை, 90களில் கோவையில் 100க்கும் மேற்ப்பட்ட பைனான்ஸ் கம்பெனிகள் இரவோடு இரவாக காணாமல் போனது தெரியும். கோவை அன்பர்கள் தெரிந்தால் விசாரித்துப்பாருங்கள்.
More about Fraud Selvam
Also..This guy got the audacity to post Hindus only allowed banner at his temple gate..and that too in America! This fraudster should be allowed into this country in the first place..
பயங்கரவாதத்தை விட மனித இனத்திற்கு அதிக அழிவைத்தர காத்திருக்கும் "குளோபல் வார்மிங்" பற்றிய
விழிப்புணர்வுக்காக நாளை ( 08-08-2008) இரவு எட்டு மணிக்கு எட்டு நிமிடங்கள் மின்சார
விளக்குகளையும்,மின் சாதனங்களையும் உபயோகிப்பதை முற்றிலும் தவிர்ப்போம்.
உலகின் வெப்பமயமாதலின் தீமைகளை எதிர்க்க அணி திரள்வோம்
ஒன்றுபடுவோம்
போராடுவோம்
தியாகம் செய்வோம்
இறுதி வெற்றி நமதே
மனிதம் காப்போம்
மானுடம் காப்போம்.
இயற்கை அன்னையை வணங்கி மகிழ்வோம்.
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
ivanungala yellam aayiram periyaar vandhakooda :-)))))
@யாத்ரீகன்
பெரியாரெல்லாம் எதுக்குங்க... படிச்ச ஆட்கள் கூட இப்படி இருப்பதுதான் வருத்தம்!
//நாராயணனின் மகள் ப்ரொமிற்கு யாரோ கருப்பனுடன் வந்திருந்ததை ஸ்டார்ட்-அப் கம்பெனி CTOவின் மகனுடன் சென்ற எங்கள் அந்திம்பேரின் மகள் சொன்னதையும், சென்னைக்கு அருகே உள்ள குக்கிராமத்திற்கும் அருகிலுள்ள பட்டிக்காட்டில் நாங்கள் 7 வருடங்களுக்கு முன்பு வாங்கிய 77.29 லட்சம் பெருமானமுள்ள மனைக்கு அருகில் இருந்த அதே அளவு மனை இப்போது 3.22 கோடிக்கு விலைபோவதையும், எதிர் வீட்டு கேத்தி எங்கள் தோட்டத்து டேலியாப் பூக்களையும் எங்கள் கருங்கூந்தலை வியந்ததையும், நெப்ராஸ்காவிற்கோ வயோமிங்கிற்கோ யுனிவர்சிட்டி டீன் தனிப்பட்ட முறையில் அழைப்பு விடுத்ததால் மட்டுமே மாசசூசட்ஸ் இன்ஸ்டிடியுட்டில் கிடைத்த இடத்தை மறுத்து பேச்சுலர்ஸ் டிகிரி படிக்க சென்றிருக்கும் மூத்தவன் பற்றியும், 2419 பேர் படிக்கும் பள்ளியில் 7 மாணவர்கள் உறுப்பினராக உள்ள மனக்கணிதம் மற்றும் எறும்பு சேமிப்பு டீமில் இளைய மகள் முன்னணியில் இருப்பதை பகிர்வதற்கும், சுதர்ஷனுக்கு வேலை போனதால் அவன் மனைவி அகிலா கே-மார்ட்டில் மணிக்கு 6.55 டாலருக்கு பொட்டலம் கட்டுவதை ரேஷ்மா பார்த்ததையும், ஒவ்வொரு முறையும் ரம்யா பாட்லாக் பார்ட்டிகளுக்கு தயிர்சாதத்தையே கொண்டுவரும் கஞ்சத்தனத்தையும் அதையும் கூட அவள் கணவர்தான் சமைக்கிறார் என்ற இரகசியத்தையும் உங்களிடம் தொலைப்பேசியிலா தெரிவிக்க முடியும்?//
ரசித்தேன். ரொம்பத்தான் அனுபவிச்சு எழுதியிருக்கீங்க! என்னதான் எழுதினாலும், அவ்வளவு சீக்கிரம் திருந்திடுவோமா நாங்க?? :)
அப்படியே நம்ம வீட்டுக்கும் வாங்க. அமெரிக்க அல்பங்கள் பத்தி நான் கொஞ்சம் எழுதி இருக்கேன்.
@தஞ்சாவூரான்
பின்னூட்டத்திற்கு நன்றி!
உங்க பதிவெல்லாம் பெருசா இருக்குங்க. அட்டென்ஷன் ஸ்பான் அதிகமிருக்கும் வாரக்கடைசியில் கண்டிப்பாக வாசிக்கிறேன்!
கோவில்ல இத்தனை பாலிடிக்ஸ் இருக்கா? எனக்கு தெரிந்து நான் எதையுமே கேள்விப்பட்டதில்லை. கோவிலுக்கு சும்மா ஒரு கடமைக்கு போவதோடு சரி.
விளக்கமா எழுதி இருக்கீங்க, ஆனால்
//எங்கள் மனைவிமார்கள் எங்களுக்கு தெரியாமல் அனுப்பிய பணத்தில்//
இது மட்டும் நெருடலாக இருக்கிறது, நகைச்சுவை என்றால் பரவாயில்லை :)
யு.எஸ் தமிழன் பட்டைய கிளப்பி ஒரு ஆராய்ச்சி கட்டுரையளவிற்கு எழுதியிருக்கீங்களே.
என்னய ஃபாக்ஸ் 5 நியூஸ்ல நம்மூரு செல்வத்தை பத்தி போடும் பொழுது வேக வேகமா கூப்பிட்டு கேட்டாங்க, இதப் பத்தி கேள்விப்பட்டீயான்னு கேட்டு. பார்த்தாவுடன் எனக்குத் தோன்றியது, நம்ம மக்கா எங்க போனாலும் அவிங்கா தரித்திரியத்தையும் கூடவே கூட்டிட்டு வந்துடுவானுங்கன்னு தோனுச்சு.
இந்தாளு ஃபோட்டோவ நான் ""தென்றல்" இதழ்ல பார்க்கும் பொழுதெல்லாம் சிரிப்ப அடக்க முடியாது, கொடுமை...
சரி, படிப்பிற்கும் இது போன்ற மோடு முட்டித் தனத்திற்கும் ஏதாவது தொடர்புருக்குதா..?
@கயல்விழி
கோவில் பாலிடிக்ஸ் எல்லாம் நம்ப ஊர் பாலிடிக்ஸுக்கு பக்கத்துலகூட வரமுடியாது. சிரிச்சுகிட்டே சீரழிக்கும் கும்பல் யுஎஸ்ல இருக்கு!
>>>>இது மட்டும் நெருடலாக இருக்கிறது
மனைவிமார்களுக்கு தெரியாம நாங்க பண்றதெல்லாம் எழுதினா வூட்ல போஜனமும் போஷாக்கும் இல்லாம விரட்டிடுவாங்க... சோ சைலண்ட்டா விட்டுட்டேன்.
//கோவில் பாலிடிக்ஸ் எல்லாம் நம்ப ஊர் பாலிடிக்ஸுக்கு பக்கத்துலகூட வரமுடியாது. சிரிச்சுகிட்டே சீரழிக்கும் கும்பல் யுஎஸ்ல இருக்கு!
//
அப்படியா? என் கண்ணில் இதெல்லாம் படுவதே இல்லை. மேலும் கோவிலில் ஊர் வம்பெல்லாம் பேசியதில்லை, அங்கேயும் வழக்கம் போல கிண்டல் கலாட்டா தான்.
//மனைவிமார்களுக்கு தெரியாம நாங்க பண்றதெல்லாம் எழுதினா வூட்ல போஜனமும் போஷாக்கும் இல்லாம விரட்டிடுவாங்க... சோ சைலண்ட்டா விட்டுட்டேன்.//
அப்படினா சரி
@Thekkikattan|தெகா
நன்றி தெகா!
Sulekha.com சைட்ல போய் பார்த்தாத்தான் இந்தாள்கிட்ட மாட்டுன மக்களைப்பத்தி தெரியுது. கிரெடிட் கார்ட்டை தேயிதேயின்னு தேய்சிருக்கார்.
ஏமாறுவதுன்னு வந்துட்ட படிச்சவங்களும் சரி படிக்காதவங்களும் சரி ஒரே தட்டுலதான் இருப்பாய்ங்க போல!
@கயல்விழி
நீங்க எத்தன வருஷமாய் யுஎஸ்ல இருக்கீங்க? ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே?
Patron Members meeting, Board of Trustee election இதெல்லாம் போனதில்லையா? இவ்வளவு ஏன், volunteers meetingல கூட பாலிடிக்ஸ் புகுந்து விளையாடும் :). பேசாம வெள்ளக்காரன் சூப் கிச்சனுக்கு போய் உதவி பண்ணலாம்ன்னு நினைக்கத்தோனும்!
//நீங்க எத்தன வருஷமாய் யுஎஸ்ல இருக்கீங்க? ரொம்ப நல்லவங்களா இருக்கீங்களே?
//
2002 இல் இருந்து
//Patron Members meeting, Board of Trustee election இதெல்லாம் போனதில்லையா? இவ்வளவு ஏன், volunteers meetingல கூட பாலிடிக்ஸ் புகுந்து விளையாடும் :). பேசாம வெள்ளக்காரன் சூப் கிச்சனுக்கு போய் உதவி பண்ணலாம்ன்னு நினைக்கத்தோனும்!//
இல்லீங்கோ, நாமெல்லாம் அரை டிக்கெட் என்பதால் அவங்க விளையாட்டுக்கு சேர்த்துக்க மாட்டாங்க, சும்மா ஒப்புக்கு சப்பாணியா போய் கடவுளுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு ஜூட் விடுவோம்.
@கயல்விழி
>>>>சும்மா ஒப்புக்கு சப்பாணியா போய் கடவுளுக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு ஜூட் விடுவோம்.
கவலையேபடாதீங்க.
சீக்கிரமே வாலண்டயராக பிராப்திரஸ்து!
அதிவிரைவு போர்ட் ஆஃப் டிரஸ்டியாக பிராப்திரஸ்து!!
பிரஸிடண்ட், செக்ரட்டரியாக பிராப்திரஸ்து!!!
அமெரிக்க வாழ்க்கை கனஜோராக பிராப்திரஸ்து!!!!
Post a Comment