தமிழ்ல பாட்டிருந்தா நமக்கு பிடிக்காதுல்ல-
எங்கேயோ 'தேவுதையை' 'பாருத்த' மயக்கத்தில் காதலை தூதுவிட்ட இந்த கவிதை காணாமல் போய்விட்டது!
காதலில் இயல்பாகத் தோன்றும் பரிதவிப்பு, சந்தேகம், காமம், அவசரம் என்று பல கட்டங்களை தொட்டுச்சென்ற அருமையான புதிய கற்பனை, அதற்கு ஈடுகொடுக்கும் அந்தப் பெண்குரல். இதற்கு முன் காதலை எந்த பாடலாசிரியரும் தூதுவிட்டதாக நினைவில்லை. அதுசரி காதலைப்பத்தி 2000 சினிமா எடுத்தபிறகுதானே 'காதல்' ன்னு பேரு வச்சு ஒரு படம் எடுக்கமுடிஞ்சது!
'சுப்ரமணியபுரம்' சசிக்குமாரையோ, செல்வராகவனையோ இந்த பாட்டை மறுஇயக்கம் செய்யக்கேட்கவேண்டும். இப்போதைக்கு ஐ-பாடில் கேட்பதே உத்தமம்!
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அட இப்ப கேக்க நல்லாதான் இருக்கு!
நிச்சயமா!
அன்னத்தை தூது விட்டாச்சு, மயிலை, மழையை, வெயிலை, பட்சியை, ஏன் தமிழையும் கூட தூது விட்டாச்சு - காதல் விடு தூது புதுமையாத்தான் இருக்கு!
Post a Comment