பாமரனுக்கு பரதேசியின் கடுதாசி

அய்யா பாமரனுக்கு... படிப்பறிவில்லாத பரதேசியோட பெரிய கும்பிடுங்கோ.

உங்களப்போல பககம்பக்கமா, பகுதிபகுதியா ஏழு வாரத்துக்கு இழு...க்...கற மாதிரியோ, பாரதிராசா படத்துல வர்ற காந்திமதி கிழவி கணக்கா மடிச்சி ஒடிச்சி கடுதாசி எழுதற வித்த எனக்கு தெரியாது சாமியோவ்... ஏதோ எழைக்கேத்த எள்ளுருண்டையா பெருமாளுக்கேத்த பொரியுருண்டையா என்னால முடிஞ்ச நாலு வார்த்தய தட்டிப்போட்டுடறன். எத்தனையோ பெரிய பெரிய டைரக்டருகோ, நடிகருங்களுக்கெல்லாம் கடுதாசி போடுறியே ராசா, உனக்குன்னு, உனக்கே உனக்கூன்னு ஒரு பய கடுதாசி எழுதியிருப்பானாய்யா? சரி பேரு போட்டு வேண்டாம்யா, ஒரு மொட்ட கடுதாசி எழுத வக்கிருந்துச்சா யாருக்காவதும். அதனாலதான்யா மனசு உருகி உனக்காக ஒரு லெட்டர்... வேணா கடுதாசிண்ணே வெச்சுக்கோ... உனக்கே உனக்கு... உம் பேரப் போட்டு எழுதியிருக்கேன் ராசா!

பல்லடத்துல இருக்கற எங்க ஒண்ணுவிட்ட பங்காளிப்பய பரந்தாமன் உங்கள மாதிரித்தான் அத்தன பெருக்கும் பக்கம் பக்கமா கடுதாசி எழுதுவான்.

முன்னனெல்லாம் அவங்கடுதாசி வந்துச்சுண்ணாலே பின்கோடியில குடியிருக்கற கோமளாக்காவுல இருந்து எதிவீட்டு கஞ்சாயியக்கா (அவுங்க பேரு காஞ்சனா, கஞ்சத்தனமா இருக்கறதால இந்த பேரு, ஆனா ரொம்ப நல்லவங்க)வரை பாத்துட்டுருக்கற வேல வெட்டிய அப்படியே போட்போட்டு எங்கூட்டு திண்ணையில அவங்கடுதாசியப் போஸ்ட்மேன் பெரியகனககவுண்டர் படிக்கறத அப்படி கேப்போம். அத்தன சமாச்சாரமிருக்கும் அவங்கடுதாசியில. அவன் டவுனுல வேல பார்க்கறதால எல்லா விசயமும் அவனுக்கு தெரிஞ்சிருந்துச்சு.சினிமா அரசியல்னு எல்லாத்தப் பத்தியும் ஒரு நாலுவரி அப்பிடியே துலக்கி எடுத்துப்போட்டு போயிடுவான்! ஆனா பாருங்க எங்அ ஊருக்கும் முத்தாரம், வண்ணத்திரை, நக்கீரன்னு பத்திரிக்க எல்லாம் வர ஆரம்பிச்ச உடனே அதுவும் நம்ம பல்லக்குறிச்சியண்ணாச்சி கடையிலயே இதெல்லாம் கிடைக்கறப்போ எங்களுக்கெல்லாம் பங்காளிப்பய பரந்தாமனோட கடுதாசி போரடிச்சிபோச்சு. பங்காளிப்பய பரந்தாமன் விசயத்த சுட்டதே அங்கிருந்துதானே. ஆனாலும் பங்காளிப்பய பரந்தாமனுக்கு விளங்கினாமாதிரி தெரியல்ல. இன்னைக்கும் பக்கம்பக்கம எங்களுக்கெல்லாம் தெரிஞ்ச விஷயத்தையே எழுதித்தள்ளீட்டிருக்கான், படிக்கத்தான் நாதியில்ல. அது சரி... பாருங்க எதயோ எழுதித்தொலைக்க நினைச்சு எதையோ தட்டிகிட்டிருக்கேன்.

முன்ன நீங்க குமுத்தத்துல எழுதிக் கிழிச்சுகிட்டிருந்தீங்க (அட சினிமாக்காரங்கள கிழிச்சத சொல்றேங்க!). அடேயப்பா... அப்படியே தீப்பொறி பறக்கும். ஆகாகா... நம்ம யோசிச்சு பேசபயந்த விசயத்தையெல்ல்லாம் தகிரியமா, அதுவும் மக்கள் அதிகம் படிக்கும் ஒரு வெகுசனப் பத்திரிக்கைல எழுதறாரேன்னு அப்படியே உச்சி குளிந்து போச்சு ராசா. பெரிய பெரிய தலைகளெல்லாம் களிங்கத்து ஆனை காலுல மிதிபட்ட சிப்பாய் தல மாதிரி நசுங்கிபோச்சி கண்ணு! பாலசந்தரு, மணிரத்தினம்ன்னு பெரிசுகளிலிருந்து, முந்தாநாள் மொளச்ச சங்கர் சேரன் வரைக்கும் சும்மா வெறிநாய்க் கணக்கா குதறீட்ட மக்கா! இப்பல்லாம் இவிங்க கத டிஸ்கசனுக்கு ரூம்போடுறதக்கு முன்ன, பாமரன் என்ன சொன்னாரம் (குத்தம்) பேசுவாறோன்னு பயந்து ஒண்ணுக்கு போயிகிட்டே யோசிக்கிறாங்கலாம்.

ஆனா பாரு கண்ணு, நீ இந்த குத்தத்தையெல்லாம் மத்தவிங்க மேலதான் சொல்றியாம். உன் நண்பர்கள் (அது என்ன ராசா, உன் உடன் பிறவா நண்பனைக்கூட '---- என்ற இளைஞன்'னுதான் பத்திரிக்கையில எழுதிவியோ? என்ன கஸமால நட்போ போ கண்ணு) சினிமான்ற பேருல பண்ற கூத்தெல்லாம் உம் பாமர பகுத்தறிவு கண்ணுக்கு தெரியறதே இல்லையாம். எதேதோ இஸமு ரஸமூன்னு எழுதரையே துரை... இது இன்னா செலக்டிவ் குருட்டு அம்னிசியா இஸம் நைனா? இல்ல மெமண்டோவுல இருந்து உருவுன கஜினி ஸார்ட் டெர்ம் மெமரி லாஸ் இஸமா? சிவாஜிராவ் பத்தி உன்நண்பந்தான் சிலம்பல் 'சவுண்டு' விட்டதுன்னு சொல்ல ஏங்கண்ணு பயந்துட்ட? இல்ல நாளைக்கே... சரி இல்ல விடு, நாளண்னைக்கே நம்ம இராமக்கிருஷ்ணன் மாதிரி, ரஜினி 'சாரு' உன்ன டிஸ்கஷனுக்கு கூப்பிட்டுட்டா மூஞ்சிய வெச்சுக்க இடங்கிடைக்காதுன்னு ஜகா வாங்கியிருக்கலாம்... வயித்துக்கும் ஈயனுமில்லையா?


சரிகண்ணு... சொல்ல வந்தது இதத்தான்... உன்ர பகிரங்க கடுதாசிகளெல்லாம் ப்ழசாயிடுச்சி கண்ணு. உம் ஃபேவரெட் டைரக்டரு பாசையில சொல்லணும்னா... 'மாத்தி யோசி!' கொஞ்சம் பழைய பதிவுகளைப் படியுமைய்யா... நீர் எழுதுவதெல்லாம் ரெண்டு மூணு வருசத்துக்கும் முன்னயே பேசி தொலச்ச விஷயமய்யா. பல்லக்குத்தூக்கிகள் பாதையிருக்கும் வரைதானாய்யா தூக்கிகிட்டு போவாங்க, அதற்கப்புறம் நமக்கு நாமேதான்!

முன்னெல்லாம் உம்மகடுதாசி படிச்சாலே அதிரும்யா... இப்ப எரிச்சல்!

நேசமுடன் (அட நெசமாலுந்தான்),
பரதேசி

2 comments:

Anonymous said...

http://amkworld.blogspot.com/2007/07/blog-post_15.html

Anonymous said...

இன்னும் கூட காணலையே?