தமிழ் இணைய பி(த்)தா

ஒரிசினல்:

http://jannal.blogspot.com/2007/07/blog-post_14.html


நமைச்சல்:

அடேயப்பா! யப்பப்பா!! பப்பரப்பா!!! ஆதாரத்தை அடுக்கிவைத்ததும் 'பெயரில்லாத பெரிய மனுஷன்' எல்லாம் 'அன்புள்ள பெயரிலி' அந்தர்பல்டி அருமை பெரியவரே(உங்க எக்ஸ்பீரியன்ஸு என் வயசு, அதான்)! சும்மானச்சுக்கும் 'இகழ்தலும் இல்லை'ன்னு போஸ்டர் ஒட்டிகிட்டாப் போதாது சாரே... அதுப்படி நடக்கவும் வேணுஞ்சாமி! நீங்க வெட்டி ஒட்டி போட்டு திசைகளை (ஆகாகாகாகா பன்னு punனு) திருப்புவதெல்லாம் கூகளாண்டவர் துணையுடன் ரெண்டாப்பு படிக்கும் அரை டவுசர் பாண்டிகலெல்லாம் எடுத்து போடக்கூடியதுதான்.

வரலாறு எழுதுபவனின் பார்வையில்தான் வரலாறு நிர்ணயப்படுத்தப்படுகிறது என்ற கூற்றின் மூலம் தாங்கள் வரைந்த அரைவேக்காட்டு எட்டை வரலாறு என்று நிறுவும் நுண் அரசியலை, வயத்துக்கு ஈர்ந்ததால் பாமரன்களும் (அவருக்கு கூஜா தூக்கும் அரை அணா காலி டப்பா ஓசை பார்ட்டிகளும்) வேண்டுமானால் கண்டுகொள்ளாதது போல நகர்ந்து போகலாம், நமக்கு அந்த பருப்பு வேண்டாம் மக்கா!

கம்மிங் பேக் டு அந்துமணிஸ் பாய்ண்ட், இந்த பதிவில் இருக்கும் வலையுலகைப்பற்றி உங்களின் அறியாமையை முன்பே எங்களுக்கு அறிய தந்திருந்தால் உங்க எட்டை எட்டியும் பார்த்திருப்போமா? அத விட்டுபோட்டு, 'தமிழ் இணையப் பிதா', சுதன், பரிசுத்த ஆவின்னெல்லாம் பட்டம் கொடுப்பானேன்... வாங்கிக் கட்டிக்கொள்வானேன்? பட்டமெல்லாம் வேண்டாம்பூ!

அவரை நாந்தான் எழுதச்சொன்னேன், பீன்ஸை நாந்தான் படிக்கச்சொன்னேன், காரட்டை நாந்தான் கடிக்கச்சொன்னேன் என்ற பழமை
பார்ட்டிகளெல்லாம் இல்லாம வலைப்பதிவுகள் சச்சரவுகளுக்கு மத்தியிலும் இப்பத்தான் நாலு அடி முன்ன போகுது, உங்க இரும்பு குண்டை மறுபடியும் மாட்டிப்புடதேங்கப்பூ! உங்களைப்போல சாளரம் (அதாஞ்சாமி ஜன்னலு) அமைத்து அதன் ஊடாக உலகத்தை பார்ப்பவர்களுக்கு சுவர்களை உடைத்து நாங்கள் காணும் உலகத்தைக்காணுவதும் கடினம்தான், அதை அங்கீகரிப்பதும் முடியாததுதான். உங்களுக்கோர் நற்செய்தி... உங்கள் அங்கீகரம் எமக்குத் தேவையில்லை.

வலையைவிட்டுப்போன 'எழுத்தாளர்களை' எல்லாம் நீங்கள் திரும்ப அழைத்துவருவதாக பட்சி பறந்து வந்து சொல்லுச்சி... வேண்டாஞ்சாமி அவிங்களெல்லாம் அங்கிட்டே பாராமல் (கலக்கற சந்துரு... மறுபடியும் பன்னு!) வாராமல் இருந்தல் நலம்! இப்ப எழுதறவங்களெல்லாம் அழைத்தோ இழுத்தோ வரப்பட்டவர்கள் அல்ல... எழுத்தாளர்களை என்று தங்களை அடையாளப்படுத்தி சிறைச்சன்னலுக்குள்ளிருந்து குருட்டு பார்வைகளை திணிப்பவர்களும் அல்ல... வலைப்பதிவு கட்டளைகள் (ஏப்பா பாபா... பழசையெல்லாம் பத்திரமா வெச்சிருப்பையே... அந்த கட்டளை கண்றாவியையும் புதுசா வந்தவிங்களுக்கு எடுத்து போடுமையா தெரிஞ்சுகிட்டும்)என்று பீடத்தின் மீதம்ர்ந்து எங்களை பிச்சைக்காரர்களைப் போல ஏளனமாக நடத்துவதுமில்லை!

பீடத்தின் மீதிருந்து கீழிறங்குவீர்கள் என்ற (ஐந்தாவது முறையாக) நம்பிக்கையுடன்!

11 comments:

said...

யூ எஸ் தமிழரே
நீர் யாராக இருப்பினும், உமது தலைகீழ்ச்சிலுவையையும் காவும் சாத்தானின் ஊழியராக என்னை மாற்றிவிடும் நிலை இவ்விடுகை ஈந்திருப்பதாகத் தோன்றுவதால், தண்ணீரோ வெந்நீரோ நீர் நானில்லையென்பதையும், நீரின் பின்னால் ஓடுவது யாரென்று (ஓர் ஊகம் இருக்கின்றபோதுங்கூட) எனக்குத் தெரியாதென்பதையும் இங்கே சுட்டிவிடுவது நல்லதென்று படுகின்றது. பல பதிவர்களுக்கு அது தெளிந்தபோதுங்கூட, அடிக்கடி வராதவர்கள், என்/மாலனின் பதிவுகளிலே மாலனுக்குப் பதில் தருவேனெனப் பின்னூட்டம் இட்ட கையுடனேயே வேறொரு பெயரிலே தாக்குவதாகவும் எண்ணிவிடக்கூடும். பதில் தருவேன் என்று அந்தப்புறம் சொல்லிவிட்டு, இந்தப்புறம் யூ எஸ் தமிழன் என்று தாக்குகின்றான் என்பவர்களுக்கு இல்லை என்று நிரூபிக்க வசதியில்லை. அப்படித்தான் சொல்லப்போகின்றார்களென்றால், ஆமென் & ததாஸ்து. வேறென்ன செய்வது?
இப்பின்னூட்டத்தை விட விரும்பினால், விடும். இல்லாவிட்டால், விடாதிரும்.

said...

பின்னூட்டத்திற்கு என்னவே
-/! காசா பணமா டாலரா பவுண்டா... விட்டுவிட்டா போகிறது.

நீரும் தீயும் ஒன்றானால் நானும் தாமும் ஒன்றல்லோ?

யு.எஸ்.தமிழன்

said...

>>ஆதாரத்தை அடுக்கிவைத்ததும் 'பெயரில்லாத பெரிய மனுஷன்' எல்லாம் 'அன்புள்ள பெயரிலி' அந்தர்பல்டி அருமை பெரியவரே<<

அன்றும் கூட அவரை அன்பில்லாத பெரியமனுசன் என்று சொல்லவில்லையே? அவர் என்றைக்கும் அன்பிற்குரியவர்தான். அதில் எனக்கு எந்தக் குழப்பமும் இல்லை, சிறுவா.கருதில் மாறுபாடு இருப்பதாலேயே ஒருவர் வெறுக்கப்படத் தக்கவராகிவிடுவாரா?
மாற்றுக் கருத்துக் கொண்டவர்களை மண்டையில் போட்டுத் தள்ளும் கலாசாரம் எங்களுடையதில்லை.

எங்களுடையது பகைவனுக்கருள்வாய் நன்நெஞ்சே, மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு கலாசாரம்.

அது சரி, பெயரில்லாததைத் தன் அடையாளமாக அறிவித்துவிட்டவரை எந்தப் பெயரிட்டு அழைப்பது?

>>வலையைவிட்டுப்போன 'எழுத்தாளர்களை' எல்லாம் நீங்கள் திரும்ப அழைத்துவருவதாக பட்சி பறந்து வந்து சொல்லுச்சி... வேண்டாஞ்சாமி <<

அதுதான் உங்கள் மிரட்சிக்குக் காரணமா? பொடியரே, அஞ்ச வேண்டாம், போட்டிக் க்டை போடும் திட்டம் ஏதுமில்லை.

அப்படி ஏதும் முனைப்போ, முயற்சியோ, திட்டமோ ஏதும் இல்லை. இது விஷயமாக நான் இது வரை எவருக்கும் ஒரு மின்னஞ்சல் கூட அனுப்பவில்லை. அனுப்பும் எண்ணமும் இல்லை.

அனறு போலன்றி இன்று எததனையோ திரட்டிகள் வந்துவிட்டன.இந்த மடம் இல்லாவிட்டால் சந்தை மடம், அதுவுக் கூட இல்லாக்காட்டி பிளாட்டுப்பார சொந்த இடம் இருக்கிறது.

பிரசினை திரட்டிகளில் இல்லை, கலாசாரத்தில் இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளும் அனுபவமும் அறிவும் எம்மிடம் இருக்கிறது.

said...

குற்றம்சொல்லியே பெயர்வாங்கும் உத்தி ?

அடுத்தது நீங்க டாவின்ஸி கோடு எழுதுன அய்யா, இல்லன்னா ஹாரி பாட்டரு எழுதுற அம்மா ஆரையாவது வைது ஒரு லெட்டரு இல்ல கடிதம் ச்சே கடுதாசின்னே வெச்சுக்க போட்டுக்க...

இன்னா சர்தானா நான் சொல்றது ?

said...

நன்றி செந்தழல் ரவி.

யாரை சொல்றீங்க, பாமரன் அண்ணாத்தையவா? அப்ப அவர் குத்தம் சொல்லியே பேரு வாங்கனவரூன்னு சொல்றீங்க... நீங்க சொன்னா மறுப்பேது? ஒகட்டி லேது!!

;)

said...

இப்படி போடுற பின்னூட்டத்துல புள்ளிக்கெல்லாம் அர்த்தம் / குத்து / உள்குத்து எடுக்கறதுல ஊ.எஸ் தமிலனுக்கு தவிர வேற ஆருக்கு கைவரும் ?

அ.மு.க பதிவுல உம்மை கலாய்ச்சிருக்கம், வந்து ஒரு பின்னூட்டம் போட்டு உங்க

"பகைவருக்கருளும் நன்னெஞ்ச" காட்டுங்க பார்ப்போம்...

இல்லைன்னா நாங்க ஜொன்னது ஜரின்னு ஆகிருமே ?

ஏமி, சூஸ்துன்னாரா ?

said...

மாலன் சாரே, தனியே சொந்தகட வெச்சும் கொள்வாரில்லாம தானே, 360 வனவாசமெல்லாம் ஜனவாசமாப் போச்சு. அப்புறமுமென்ன ப்ளாட்பார சொந்த இடம், நொந்த இடம்ன்னு.

மாடெரேஷன், மாட்டாப்பரேஷன் எல்லாம் பண்ணித்தான் க்ளப்பையும், மரத்தடியையும் இஸ்த்து மூடியாச்சே அப்புறமென்ன சாரே... தமிழ்ஷ்மணத்தையும் பாட கட்ட ஐடியாவா? நல்ல பேஷா நடத்துங்கோ!

said...

ஏமி ரவி நாநா... ஒக்க நச்சத்திரம் வாங்கினத்துக்கே இந்த ஆட்டமெல்லாம்... உன்க்கே அதிகமா தெரியல? சூடு பாபு... இந்த விள்யாட்டுக்கு நீ புச்சு... ஒதிலிபோ நாநா... பெத்தவாரூ நாங்க பேசி தீர்த்துக்கறோம்.

said...

இரும்படிக்கற எடத்துல ஈக்கு இன்னா வேலைன்றீங்க...ஹா ஹா (கிளப்பு, குண்டாந்தடி : இந்த மேட்டரு எல்லாத்துலயும் நாக்கு நாலேஜு லேது...ரெம்ம்ப பழைய மேட்டரா கீது...)

நீங்க சொன்னா ஜரியாத்தானிருக்கும்...

பேசாம நான் அப்பீட்டாயிக்கரேன்...:

ஓக்கே ?

said...

ஓக்கே ரவி!

இதற்கு முன் உங்கள் பெயரில் வந்த சில ஆபாச பின்னூட்டங்களை நீங்கள் இடவில்லை என்ற நம்பிக்கையில் நீக்கிவிட்டேன்!

said...

என் மீதான நம்பிக்கைக்கு நன்றி யூ.எஸ் தமிழன் அவர்களே...!!!