அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பான்மையான தெற்காசிய மக்கள் ஜனநாயகக் கட்சியை அதரிப்பவர்களாகவே உள்ளனர். SAALT - South Asian American Leader of Tomorrow, தெற்காசிய அமெரிக்கர் வருங்கால தலைவர்கள் என்ற பெயரில் நியுயார்க்கில் இயங்கும் நிறுவனம் 2004ஆம் ஆண்டு நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 76 சதவித தெற்காசியர்கள் ஜனநாயகக் கட்சியினை ஆதரித்தனர். சுமார் 9 சதவிதத்தினரே குடியரசுக்கட்சியை ஆதரித்தனர். (ஆனால் உண்மையில் குடியரசுக் கட்சியின் கொள்கைகளே குடிபெயர்ந்த மக்களை ஆதரிப்பதாக இருந்து வருவது ஒரு வேடிக்கையான முரண்).
என்னுடைய தொழிலில் அதிகமாக பயணிக்கவேண்டியுள்ளதால்(பெரும்பாலும் கிழக்குகரை மாநிலங்கள்), நான் சந்தித்த தெற்காசியர் பலரும் ஜனநாயகக்கட்சியின் ஆதரவாளர்களாவே கண்டிருக்கிறேன். ஜார்ஜியா, வெர்மாண்ட் போன்ற சில மாநிலங்களிலில் மட்டுமே குறிப்பிடத்தகுந்த குடியரசுக்கட்சி ஆதரவாளர்களை சந்தித்திருக்கிறேன்.
இந்த பின்புலத்தில் இந்திய வம்சாவளியை சார்ந்த இரண்டு இந்திய எழுத்தாளர்/பத்திரிக்கையாளர்கள் சமிப காலங்களில் பெரிதும் கவனிக்கப்படுகிறார்கள்.
தினேஷ் டி'சோஷா:
குடியரசுக்கட்சியின் தீவிர வலதுசாரி கன்சர்வேட்டிவ்களே தொடப்பயப்படும் பல விஷயங்களை எளிதில் எடுத்து கையாள்வதில் தினேஷ் டி'சோஷா மிக முக்கியமானவர். ரீகனின் திட்டக்குழு உறுப்பினராக 1988ல் பணியாற்றியவர். ரீகனைப்பற்றி "RONALD REAGAN: How an Ordinary Man Became an Extraordinary Leader" என்ற புத்தகத்தினை வெளியிட்டு பல மூத்த வலதுசாரி சிந்தனையாளர்களின் கவனத்தைப் பெற்றார். அவருடைய அண்மைய வெளியீடான 'The Enemy at Home: The Cultural Left and Its Responsibility for 9/11' பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. (நான் இன்னும் இந்த புத்தகத்தை வாசித்ததில்லை). பெரும்பாலான வலதுசாரி கன்சர்வேட்டிவ் எழுத்தாளர்கள், நான் படித்தவரையில், டி'சோஷா போன்று எழுதியோ பேசியோ கேட்டதில்லை. தனது வாதங்களை கட்டமைத்து, இடதுசாரிகளின் கண்ணாடிக்கோட்டையில் குண்டு வைக்கும் திறமை தினேஷை ஒரு சிறந்த எழுத்தாளராகவும் வாதத்திறமைமிக்கவராகவும் எடுத்துக்காட்டுகிறது.
காமெடி செண்ட்ரலின் வரும் கோல்பெர்ட் வலதுசாரிகளை தன் நிகழ்ச்சியின் மூலம் அழவைப்பது அந்த நிகழ்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வாறான நிகழ்ச்சியில், தினேஷ் தன் வாதங்களை திறமையாக எடுத்து வைப்பது அவரின் திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.
ரமேஷ் பொன்னுறு:
ரமேஷ் (தினேஷைப் போல) தீவிர வலது சிந்தனை கொண்டவரில்லை. ஆனால் தன் வாதங்களை கட்டமைப்பதில் தினேஷுக்கு நிகராக வளரக்கூடிய திறமையுள்ளவர். தினேஷைப்போல வலதுசாரி அரசியல் தலைவர்களுடன் பணியாற்றாவிட்டாலும், தனது நேசனல் ரிவ்வியூ மேகசின் பத்திகளின் மூலம் பெரிது அறியப்பட்டுள்ளார். தனது பத்திரிக்கை தொழில் மூலம் பல தலைவர்களின் பழக்கமேற்படுத்திக் கொண்டிருந்தாலும், தனது சமிபத்திய புத்தகமான 'The Party of Death: The Democrats, the Media, the Courts, and the Disregard for Human Life' மூலம் வலதுசாரிகளின் செல்லப்பிள்ளை வரிசையில் வேகமாக முன்னேறி வருகிறார். ஆபார்ஷனுக்கு எதிராக சமிபத்தில் எழுதப்பட்ட சிறந்த புத்தகமாக இது கருதப்படுகிறது.
(நன்றி: crooksandliars.com)
ரமேஷ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறியவர்.
தினேஷ் இந்தியாவில் பிறந்து தனது 17வது வயதில் அமெரிக்காவிற்கு வந்து இங்கே குடியுரிமைப்பெற்றவர்.
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
படுமோசமான விசயம் இது. குறிப்பாக டிசோசாவின் எழுத்துக்கள் குமட்ட வைக்கும் குப்பை
கருத்துக்களுக்கு நன்றி அரவிந்தன்.
குப்பையா இல்லையா என்பது அவரவர் அரசியல், சமுகச் சார்பு சார்ந்த கருத்தாக்கமாக இருக்கலாம். எதையும் குப்பை என்று ஒதுக்குவது மாற்றுக்கருத்து வருவதை ஒடுக்கிவிடும். மேலும் மிகச்சிறிய சதவித தெற்காசிய அமெரிக்கர்களே ஆதரிக்கும் ஒரு கட்சியின் ஆதரவாளரின் எண்ண ஓட்டங்களை அறிய இந்த எழுத்துக்கள் மிக முக்கிய இடத்தை பிடிக்கின்றன.
மேலும் கட்டுரையில் குறிப்பிட்டதைப்போல, டி'சோஷாவின் வாதத் திறமை அவரின் அரசியல் நிலைபாடுகளையும் கடந்து ரசிக்கக்குடியவைகள் என்பது என் கருத்து.
Post a Comment