ஹிலாரி - வலுக்கும் எதிரணி

என்னுடைய மற்றொரு வலைபதிவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து வேட்பாளர்களின் வியூகம் குறித்து கோடிட்டிருந்தேன். அதில் அடுத்த கட்டமாக இப்போது ஹிலாரியைத்தாக்கி விடியோ இணையதளமான யூ-ட்யூபில் வெளியாகிய ஒரு விளம்பரம் அரசியல் வட்டாரங்களிலும் இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியுலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

விளம்பரத்தின் உள்ளடக்கம் இதுதான். பெரிய மைதானத்தின் மத்தியில் ஹிலாரியின் பேச்சு பெரும்திரையில் ஒளிபரப்பாகிறது. அதை நடைப்பிண மக்கள் எந்த உணர்ச்சியுமின்றி பார்க்கின்றனர். பெரிய சுத்தியலுடன் ஒரு பெண் திரையை நோக்கி ஓடிவருகிறாள். அவரைத்துரத்திக்கொண்டு அயுதமேந்திய காவலாளிகள் விரட்டிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அவளை நெருங்கும் முன்னரே தன்னிடமிருந்த சுத்தியலை திரையை நோக்கி சுழற்றி வீச, திரை பெரும் சத்தத்துடன் உடைகிறது. மக்கள் வாய்பிளந்து பார்க்க, ப்ராக் ஓபாமாவினுடைய இணையதள முகவரியுடன் விளம்பரம் முடிவடைகிறது.இந்த விளம்பரம் பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிரது,

[1] முதன்முதலில் ஒரு கட்சியைச் சார்ந்த வேட்பாளர் அதே கட்சியின் மற்ற வேட்பாளரை நேரிடையாக தாக்குவது, அதுவும் நேரிடையாக இணைய ஒளிக்கோப்பின் மூலம், அமெரிக்காவில் புதுசு

[2] இந்த விளம்பரம் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1984ஆம் ஆண்டு வெளியிட்ட சூப்பர் பௌல் விளம்பரத்தை தொகுத்து மாற்றி அமைக்கப்பட்டது. (ஆப்பிள் நிறுவனம் இதைப்பற்றி கருத்து எதையும் இதுவரைக் கூறவில்லை. தங்கள் சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்துக்கொண்டிருப்பார்கள் போலும்!)

[3] அரசியல் விளம்பரங்களில், விளம்பர தயாரிப்பாளர் மற்றும் உபயதாரர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விளம்ப்பரத்தில் ஓபாமாவின் இனையதள முகவரியைத்தவிர்த்து எந்த குறிப்புமில்லை

[4] ஒபாமாவின் விளம்பர நிறுவனத்தினரோ, கொள்கைப்பரப்பு மேலாளரோ இதை தாங்களோ ஓபாமாவுடன் தொடர்புடையவர்களோ வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிதுள்ளனர்.

[5] வேட்பாளர்களைத் தாக்கி வெளியிடப்படும் விளம்பர யூத்தி குடியரசுக் கட்சியை சார்ந்தவர்களே பெரும்பாலும் உபயோகித்து வந்துள்ளார்கள். ஜனநாயகக் கட்சிக்கு இந்து புதுமை!

விளம்பரத்தை பார்த்த பலர், ஜனநாயகக் கட்சிதான் திசைதிருப்பலுக்காக இவ்வாறான விளம்பரத்தை வெளியிடிருக்கும் என பலரும் கருதினர். ஆனால் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஓபாமாவின் விசிறி ஒருவரே இந்த விளம்பரத்தை தயாரித்திருப்பதாக இப்போது அறியப்படுகிறது.

ஜனநாயகக் கட்சி வலுப்பெற்று வருவதைப் போல தோன்று இந்த காலகட்டத்தில் இதைப்போன்ற சிறிய நிகழ்வுகள் கூட அக்கட்சியை ஆட்டம் காணச்செய்யும் என்பதே நிதர்சனம். மேலும் இணையம் மற்றும் யூ-ட்யூப் போன்ற தளங்கள் இந்த தேர்தலில் பெரும்பங்கு வகிக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக கொள்ளலாம்.

0 comments: