வலதுசாரிகளை ஆதரிக்கும் இரு இந்திய எழுத்தாளர்கள்

அமெரிக்காவில் வசிக்கும் பெரும்பான்மையான தெற்காசிய மக்கள் ஜனநாயகக் கட்சியை அதரிப்பவர்களாகவே உள்ளனர். SAALT - South Asian American Leader of Tomorrow, தெற்காசிய அமெரிக்கர் வருங்கால தலைவர்கள் என்ற பெயரில் நியுயார்க்கில் இயங்கும் நிறுவனம் 2004ஆம் ஆண்டு நடத்திய வாக்கெடுப்பில் சுமார் 76 சதவித தெற்காசியர்கள் ஜனநாயகக் கட்சியினை ஆதரித்தனர். சுமார் 9 சதவிதத்தினரே குடியரசுக்கட்சியை ஆதரித்தனர். (ஆனால் உண்மையில் குடியரசுக் கட்சியின் கொள்கைகளே குடிபெயர்ந்த மக்களை ஆதரிப்பதாக இருந்து வருவது ஒரு வேடிக்கையான முரண்).

என்னுடைய தொழிலில் அதிகமாக பயணிக்கவேண்டியுள்ளதால்(பெரும்பாலும் கிழக்குகரை மாநிலங்கள்), நான் சந்தித்த தெற்காசியர் பலரும் ஜனநாயகக்கட்சியின் ஆதரவாளர்களாவே கண்டிருக்கிறேன். ஜார்ஜியா, வெர்மாண்ட் போன்ற சில மாநிலங்களிலில் மட்டுமே குறிப்பிடத்தகுந்த குடியரசுக்கட்சி ஆதரவாளர்களை சந்தித்திருக்கிறேன்.

இந்த பின்புலத்தில் இந்திய வம்சாவளியை சார்ந்த இரண்டு இந்திய எழுத்தாளர்/பத்திரிக்கையாளர்கள் சமிப காலங்களில் பெரிதும் கவனிக்கப்படுகிறார்கள்.

தினேஷ் டி'சோஷா:


குடியரசுக்கட்சியின் தீவிர வலதுசாரி கன்சர்வேட்டிவ்களே தொடப்பயப்படும் பல விஷயங்களை எளிதில் எடுத்து கையாள்வதில் தினேஷ் டி'சோஷா மிக முக்கியமானவர். ரீகனின் திட்டக்குழு உறுப்பினராக 1988ல் பணியாற்றியவர். ரீகனைப்பற்றி "RONALD REAGAN: How an Ordinary Man Became an Extraordinary Leader" என்ற புத்தகத்தினை வெளியிட்டு பல மூத்த வலதுசாரி சிந்தனையாளர்களின் கவனத்தைப் பெற்றார். அவருடைய அண்மைய வெளியீடான 'The Enemy at Home: The Cultural Left and Its Responsibility for 9/11' பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. (நான் இன்னும் இந்த புத்தகத்தை வாசித்ததில்லை). பெரும்பாலான வலதுசாரி கன்சர்வேட்டிவ் எழுத்தாளர்கள், நான் படித்தவரையில், டி'சோஷா போன்று எழுதியோ பேசியோ கேட்டதில்லை. தனது வாதங்களை கட்டமைத்து, இடதுசாரிகளின் கண்ணாடிக்கோட்டையில் குண்டு வைக்கும் திறமை தினேஷை ஒரு சிறந்த எழுத்தாளராகவும் வாதத்திறமைமிக்கவராகவும் எடுத்துக்காட்டுகிறது.



காமெடி செண்ட்ரலின் வரும் கோல்பெர்ட் வலதுசாரிகளை தன் நிகழ்ச்சியின் மூலம் அழவைப்பது அந்த நிகழ்சியை தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு தெரிந்திருக்கும். அவ்வாறான நிகழ்ச்சியில், தினேஷ் தன் வாதங்களை திறமையாக எடுத்து வைப்பது அவரின் திறமைக்கு மற்றொரு எடுத்துக்காட்டு.



ரமேஷ் பொன்னுறு:


ரமேஷ் (தினேஷைப் போல) தீவிர வலது சிந்தனை கொண்டவரில்லை. ஆனால் தன் வாதங்களை கட்டமைப்பதில் தினேஷுக்கு நிகராக வளரக்கூடிய திறமையுள்ளவர். தினேஷைப்போல வலதுசாரி அரசியல் தலைவர்களுடன் பணியாற்றாவிட்டாலும், தனது நேசனல் ரிவ்வியூ மேகசின் பத்திகளின் மூலம் பெரிது அறியப்பட்டுள்ளார். தனது பத்திரிக்கை தொழில் மூலம் பல தலைவர்களின் பழக்கமேற்படுத்திக் கொண்டிருந்தாலும், தனது சமிபத்திய புத்தகமான 'The Party of Death: The Democrats, the Media, the Courts, and the Disregard for Human Life' மூலம் வலதுசாரிகளின் செல்லப்பிள்ளை வரிசையில் வேகமாக முன்னேறி வருகிறார். ஆபார்ஷனுக்கு எதிராக சமிபத்தில் எழுதப்பட்ட சிறந்த புத்தகமாக இது கருதப்படுகிறது.















(நன்றி: crooksandliars.com)

ரமேஷ் அமெரிக்காவில் பிறந்து வளர்ந்து கத்தோலிக்க மதத்திற்கு மாறியவர்.
தினேஷ் இந்தியாவில் பிறந்து தனது 17வது வயதில் அமெரிக்காவிற்கு வந்து இங்கே குடியுரிமைப்பெற்றவர்.

ஹிலாரி - வலுக்கும் எதிரணி

என்னுடைய மற்றொரு வலைபதிவில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் குறித்து வேட்பாளர்களின் வியூகம் குறித்து கோடிட்டிருந்தேன். அதில் அடுத்த கட்டமாக இப்போது ஹிலாரியைத்தாக்கி விடியோ இணையதளமான யூ-ட்யூபில் வெளியாகிய ஒரு விளம்பரம் அரசியல் வட்டாரங்களிலும் இணைய பயன்பாட்டாளர்கள் மத்தியுலும் பரபரப்பாக விவாதிக்கப்படுகிறது.

விளம்பரத்தின் உள்ளடக்கம் இதுதான். பெரிய மைதானத்தின் மத்தியில் ஹிலாரியின் பேச்சு பெரும்திரையில் ஒளிபரப்பாகிறது. அதை நடைப்பிண மக்கள் எந்த உணர்ச்சியுமின்றி பார்க்கின்றனர். பெரிய சுத்தியலுடன் ஒரு பெண் திரையை நோக்கி ஓடிவருகிறாள். அவரைத்துரத்திக்கொண்டு அயுதமேந்திய காவலாளிகள் விரட்டிக்கொண்டு வருகிறார்கள். அவர்கள் அவளை நெருங்கும் முன்னரே தன்னிடமிருந்த சுத்தியலை திரையை நோக்கி சுழற்றி வீச, திரை பெரும் சத்தத்துடன் உடைகிறது. மக்கள் வாய்பிளந்து பார்க்க, ப்ராக் ஓபாமாவினுடைய இணையதள முகவரியுடன் விளம்பரம் முடிவடைகிறது.



இந்த விளம்பரம் பல காரணங்களுக்காக விவாதிக்கப்படுகிரது,

[1] முதன்முதலில் ஒரு கட்சியைச் சார்ந்த வேட்பாளர் அதே கட்சியின் மற்ற வேட்பாளரை நேரிடையாக தாக்குவது, அதுவும் நேரிடையாக இணைய ஒளிக்கோப்பின் மூலம், அமெரிக்காவில் புதுசு

[2] இந்த விளம்பரம் ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனம் 1984ஆம் ஆண்டு வெளியிட்ட சூப்பர் பௌல் விளம்பரத்தை தொகுத்து மாற்றி அமைக்கப்பட்டது. (ஆப்பிள் நிறுவனம் இதைப்பற்றி கருத்து எதையும் இதுவரைக் கூறவில்லை. தங்கள் சட்ட ஆலோசகர்களுடன் விவாதித்துக்கொண்டிருப்பார்கள் போலும்!)

[3] அரசியல் விளம்பரங்களில், விளம்பர தயாரிப்பாளர் மற்றும் உபயதாரர்களின் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்த விளம்ப்பரத்தில் ஓபாமாவின் இனையதள முகவரியைத்தவிர்த்து எந்த குறிப்புமில்லை

[4] ஒபாமாவின் விளம்பர நிறுவனத்தினரோ, கொள்கைப்பரப்பு மேலாளரோ இதை தாங்களோ ஓபாமாவுடன் தொடர்புடையவர்களோ வெளியிடவில்லை என்று திட்டவட்டமாக தெரிவிதுள்ளனர்.

[5] வேட்பாளர்களைத் தாக்கி வெளியிடப்படும் விளம்பர யூத்தி குடியரசுக் கட்சியை சார்ந்தவர்களே பெரும்பாலும் உபயோகித்து வந்துள்ளார்கள். ஜனநாயகக் கட்சிக்கு இந்து புதுமை!

விளம்பரத்தை பார்த்த பலர், ஜனநாயகக் கட்சிதான் திசைதிருப்பலுக்காக இவ்வாறான விளம்பரத்தை வெளியிடிருக்கும் என பலரும் கருதினர். ஆனால் ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஓபாமாவின் விசிறி ஒருவரே இந்த விளம்பரத்தை தயாரித்திருப்பதாக இப்போது அறியப்படுகிறது.

ஜனநாயகக் கட்சி வலுப்பெற்று வருவதைப் போல தோன்று இந்த காலகட்டத்தில் இதைப்போன்ற சிறிய நிகழ்வுகள் கூட அக்கட்சியை ஆட்டம் காணச்செய்யும் என்பதே நிதர்சனம். மேலும் இணையம் மற்றும் யூ-ட்யூப் போன்ற தளங்கள் இந்த தேர்தலில் பெரும்பங்கு வகிக்கப்போகிறது என்பதற்கு இது ஒரு முன்னுதாரணமாக கொள்ளலாம்.