பெல்சியம் நாட்டு பிரெஞ்சு மற்றும் பெல்ஜிய மொழி செய்திகளை, கூகிள் தனது தேடு பொறி தளத்திலும், செய்தி திரட்டியிலும் வெளியிட்டமைக்காக, அந்நாடு கூகிளுக்கெதிராக காப்புரிமை மீறல் வழக்கை துவங்கியிருந்தது. அவ்வழக்கின் தீர்ப்பு கூகிளுக்கு சாதகமாக அமையவில்லை. தலைப்புச் செய்திகளை மட்டுமே கூகிள் வெளியிடுவதாகவும், முழு செய்திகளையும் வாசிக்க குறிப்பிட்ட செய்திதளங்களுக்கு தகுந்த சுட்டிகள் தந்திருப்பதாகவும் கூகிள் செய்த வாதம் பலிக்காமல் போனது.
வழக்கின் தீர்ப்பின்படி கூகிள் தனது திரட்டி சேவையை தொடரும் ஒவ்வொரு நாளுக்கும் $32500 அமெரிக்க டாலர்களை அபராதமாக் செலுத்த வேண்டும்.
வழக்கின் முடிவு கூகிளுக்கு சாதகமாக அமையாவிட்டாலும் பாதிப்பு அந்த செய்தி நிறுவனங்களுக்கே பெரும்பான்மையாக இருக்கும் என்று வலை அறிஞர்கள் கருதுகிறார்கள். பெரும் நிறுவனங்கள் கூகிள் தேடு பொறி முடிவுகளில் தங்கள் நிறுவனம் முதலிடம் வருவதற்கு விளம்பரம் செய்வதற்கு பல அயிரங்களை செலவு செய்யும் இந்த காலகட்டதில் இவ்வழக்கு சற்றே விசித்திரமானதாகும்.
இவ்வழக்கின் முடிவு கூகிள், MSN, யாஹூ போன்ற நிறுவனங்களுடன் நின்றுவிடுவதில்லை. DIGG, DELICIOUS போன்ற திரட்டி சேவைகளையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. மேலும் தமிழ்மணம், தமிழ் ப்ளாக்ஸ், தேன்கூடு போன்ற திரட்டி சேவைகளும் தங்கள் காப்புரிமையை தூசுதட்டவேண்டியது அவசியம்.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
கொசுறு... Lawsuit against Google dismissed: "Judge also grants a motion by Google to sanction KinderStart and one of its lawyers"
தகவலுக்கு நன்றி பாபா.
கூகிளுடன் தொடர்புடைய செய்திதானென்றாலும் இரு வழக்குகளின் சாராம்சம் சற்றே மாறுபடுகிறது. ஆனாலும் கூகிள் நிறுவனத்திற்கு இது குறிப்பிடத்தகுந்த வெற்றி எண்றே கொள்ளலாம்.
Post a Comment